»   »  மம்மியை ஓரம்கட்டிய மாளு

மம்மியை ஓரம்கட்டிய மாளு

Subscribe to Oneindia Tamil
வாளமீனு மாளவிகா படு ஜாலியாக இருக்கிறார். ஏகப்பட்ட பட வாய்ப்புகள் குவிந்துவருவதால் ஏற்பட்ட சந்தோஷம் இது.

ஹீரோயினாக நடித்தபோது கூட மாளவிகா இவ்வளவு சந்தோஷமாகஇருந்ததில்லையாம். சியூ அட் 9 படம் அவரது மறு பிரவேசத்திற்கு பிள்ளையார் சுழிபோட்டது.

அதில் சூப்பர் உம்மா கொடுத்து நடித்தாலும் நடித்தார், உடனே அவரைத் தேடிஏகப்பட்ட கிளாமர் பட வாய்ப்புகள்.

ஆனாலும் ஷகீலா ரேஞ்சுக்கு இறங்கி விட மனம் இல்லாமல், பொறுமை காத்தார்மாளவிகா. அப்போதுதான் வந்தது வாளமீனுக்கும் விலாங்கு மீனுக்கும் கல்யாணம்பாட்டு வாய்ப்பு.

அந்தப் பாட்டுக்கு நடித்துக் கொடுத்தபோது மாளவிகாவுக்கு இந்தப் பாட்டு இவ்வளவுஹிட் ஆகும் என்ற நம்பிக்கை இல்லையாம்.

ஆனால் உலக நாதனின் உட்டாலங்கடி கெட்டப், மாளவிகாவின் அம்சமானஅசைவுகள், அட்டகாசமான டான்ஸ் அத்தனையும் சேர்ந்து பாட்டை எங்கேயோகொண்டு போய் நிறுத்தி விட்டது.

சாவு வீட்டுக்குப் போய் ஐம்பதுக்கும், நூறுக்கும் பாடிக் கொண்டிருந்த உலகநாதன்இப்போது கார் வாங்கும் அளவுக்கு உசந்து விட்டார். மாளவிகா கையிலும் ஏகப்பட்டபடங்கள்.

இதனால் மறுபடியும் சென்னைக்கே வந்து விட்ட மாளவிகா இங்கேயே நிரந்தரமாகதங்கி விட முடிவு செய்து விட்டார். சமீபத்தில் வெளியான திருட்டுப் பயலே படத்தில்நடிப்பிலும் அசத்தியிருந்த மாளவிகாவைத் தேடி இப்போது சிங்கிள் பாட்டு, குண்டக்கமண்டக்க நடிப்பு, வில்லி கேரக்டர் என விதவிதமான வாய்ப்புகள் தேடி ஒடிவருகிறதாம்.

இனிமேல் குத்தாட்டம் மட்டும் போடாமல் வருகிற அத்தனை வாய்ப்புகளையும் வாரிஅள்ளி வசூலை குவிக்க முடிவு செய்து விட்ட மாளவிகா, தனது புதிய புகைப்படஆல்பம் ஒன்றை ரெடி செய்து தனது மானேஜர் மூலமாக உலா விட்டுள்ளார்.

அத்தோடு பட வாய்ப்பு கோரி தயாரிப்பாளர்களையும் நேரடியாகவே போய்பார்க்கிறாராம்.

முன்பெல்லாம் மாளவிகா எங்காவது சென்றால் அவருடன் கூடவே அவரதுஅம்மாவும் வருவார். ஆனால் இப்போது அம்மாவை கட் பண்ணி விட்டாராம்மாளவிகா.

மம்மி கூடவே வந்தால் சில காரியங்களுக்கு இடையூறாக இருப்பதால்இப்போதெல்லாம் தனித்துப் போய் கச்சேரி நடத்தி வருகிறார் மாளவிகா.

இப்போதைய நிலையில் முன்னணி நாயகிகளை விட படு பிசியாக இருப்பவர்மாளவிகா மட்டும்தான் என்கிறார்கள்.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil