மாளவிகாவின் 'தேரோட்டம்'

விஜயகாந்த், சரத்குமார் இணைந்து நடித்த சூப்பர் டூப்பர் ஹிட் படம் கேப்டன் பிரபாகரன். இதில் மன்சூர் அலி கான் வித்தியாசமான வில்லனாக வந்து அசத்தியிருப்பார்.
அந்தப் படத்தில் ரம்யா கிருஷ்ணன் கலக்கல் கிளாமரோடு ஆடிய பாடல் ஆட்டமா தேரோட்டமா. இப்பாடல் இப்போது ரீமிக்ஸ் ஆகிறது.
தம், குத்து உள்ளிட்ட பல மசாலாப் படங்களைக் கொடுத்த இயக்குநர் வெங்கடேஷ் இயக்கத்தில் சிவாஜியின் பேரன் ஜூனியர் சிவாஜி நடிக்க உருவாகும் படம் சிங்கக்குட்டி.
இப்படத்தில்தான் ஆட்டமா தேரோட்டமா ரீமிக்ஸ் பாடல் இடம் பெறுகிறது. ரீமிக்ஸ் பாட்டில் மாளவிகாவை ஆட விட்டு சமீபத்தில் படமாக்கினர். பாடலில் நடிகை மாளவிகாவாகவே ஆடிப் பாடியுள்ளாராம் மாளவிகா. அவருடன் இணைந்து விவேக்கும் ஆடியுள்ளார். இதில் இன்னொரு விசேஷம் என்னவென்றால், மாளவிகாவின் டச்சப் பையன் கேரக்டரில் வரும் விவேக், கற்பனையில் மாளவிகாவுடன் ஆடுவது போல நினைத்துப் பார்க்கிறாராம்.
ரம்யாவின் ஒரிஜினல் ஆட்டத்தை தூக்கிச் சாப்பிடுமா மாளவிகாவின் இந்த ரீமிக்ஸ் தேரோட்டம்?


Click it and Unblock the Notifications











