பெண்களுக்கு திருமணம் தேவையா? கணவரை பிரிந்த நடிகையின் விரக்தி பதிவு!
சென்னை: திருமணம் என்பது ஆயிரம் காலத்து பயிரு, ஆயிரம் பொய்ய சொல்லியாவது ஒரு கல்யாணத்தை செய் என்றெல்லாம் பழமொழி இருக்கு. அப்படி திருமணம் என்பது நமது கலாச்சாரத்துடன் ஒன்றிப்போன விஷயத்தை, கொச்சைப்படுத்தும் வகையில் நடிகை ஒருவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பெண்களுக்கு திருமணம் தேவையா என கேட்டு சர்ச்சையில் சிக்கி உள்ளார்.
மலையான நடிகையான பாமா, திரையுலகிற்கு வருவதற்கு முன்பு சூர்யா டிவியில் ஒளிபரப்பான தாலி என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிவந்தார். இதன் மூலம் பிரபலமான இவர், நிவேத்யம் படத்தில் ஒரு கேரக்டரில் நடித்தார். இதைத்தொடர்ந்து, வினயன் இயக்கிய ஹரீந்திரன் ஒரு நிஷ்கலங்கன் மணிக்குட்டனுக்கு ஜோடியாக நடித்தார். ஜானி ஆண்டனி இயக்கிய சைக்கிள் படத்தில் வினீத் ஸ்ரீனிவாசனுக்கு ஜோடியாக நடித்து மலையாள சினிமாவில் பிரபரமானார்.

எல்லாம் அவன் செயல்: இவர் மலையாளப்படம் மட்டுமில்லாமல், கன்னடம், தமிழ் படத்திலும் நடித்துள்ளார். தமிழில் இவர், ரகுவரன், ரோஜா, விசு,மணிவண்ணன் நடித்த எல்லாம் அவன் செயல் என்கிற படத்தில், மருத்துவக்கல்லூரி மாணவியாக சிந்தாமணி என்கிற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த படம் கலவையான விமர்சனத்தை பெற்றது. இந்த படத்தை தொடர்ந்து ஒரு சில தமிழ் படத்தில் நடித்த இவர் மீண்டும் மலையாள படத்திலேயே நடித்து வருகிறார்.

திருமணம் தேவையா: தற்போது நடிகை பாமா, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பெண்களின் திருமணம் குறித்து வரதட்சனை குறித்து கருத்த ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில்,பெண்களாகிய நமக்கு திருமணம் தேவையா? அது தேவையில்லாத, வேண்டாத ஒன்று. பணத்தை கொடுத்து எந்த பெண்ணும் திருமணம் செய்ய கூடாது. உங்களுடைய பணத்தை பறித்துக் கொண்டு தற்கொலைக்குத் தள்ளுவார்கள். மேலும் உங்களுடைய வாழ்க்கைக்குள் வருபவர் எப்படிப்பட்டவர் என்பதை தெரியாமல் திருமணம் செய்யக் கூடாது என்று பதிவிட்டிருந்தார்.
நடிகையின் விளக்கம்: நடிகை பாமா, திருமணம் பெண்களுக்கு தேவையா என்று கேட்டது பெரும் சர்ச்சையான நிலையில், அந்த பதிவினை நீக்கி பாமா, இதற்கு விளக்கம் கொடுத்துள்ளார். அதில், வரதட்சணை கொடுத்து திருமணம் செய்ய வேண்டாம் என்ற அர்த்தத்தில் தான் பதிவிட்டு இருந்தான், பெண்கள் யாரும் திருமணம் செய்யக்கூடாது என்று பாமா தெரிவித்துள்ளார்.

திருமணத்தால் வந்த விரக்தி: நடிகை பாமா, கடந்த 2020ம் ஆண்டு அருண் என்ற தொழிலதிபரைத் திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு கௌரி என்ற மகள் இருக்கிறார். சமீபத்தில் பாமா, சில தனிப்பட்ட காரணத்தால் கணவரை பிரிந்து வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது. இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராமில் இருந்த கணவரின் போட்டோவை டெலில் செய்துள்ளார். இவருக்கு திருமணத்தின் மீது இருக்கும் விரக்தியால் தான், திருமணம் குறித்து இவர் இவ்வாறு பதிவிட்டுள்ளார் என நெட்டிசன்கள் கருத்துக்களை பகிர்ந்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











