சேலையிலும் நானே.. மாடர்ன் உடையில் சோலையும் நானே.. க்யூட் நைலா உஷா!
சென்னை : நைலா உஷா புடவையிலும், மாடர்ன் உடையிலும் தனக்கு தானே போட்டா போட்டி போட்டுக்கொண்டு போட்டோக்களை பதிவிட்டு வருகிறார்.
Recommended Video
நைலா உஷா நடிகை, ரேடியோ ஜாக்கி என பன்முகம் கொண்ட ஒரு பிரபல பெண்மணி. இவர் மலையாளத்தில் குஞ்சானந்தன்றே கடை , பயர்மென், காங்ஸ்டர் , பத்தமாரி ,பிரேதம், புண்யாலன் அகர்பத்திஸ் ,புண்யாலன் பிரைவேட் லிமிடெட் , லூசிபர், பொரிஞ்சு மரியம் ஜோஸ் போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார்.

மெகா ஸ்டார் மம்மூட்டியுடன் நடித்தது மறக்கமுடியாத அனுபவம் என்று அடிக்கடி சொல்லி பெருமைப்பட்டுக்கொள்வார் நைலா.வித்யாசமான கதைகளை தேர்ந்து எடுத்து நடிப்பதில் ஆர்வமுடையவர்.

கொரோனா பாதிப்பு காரணமாக ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால் யாரும் வெளியில் வராமல் வீட்டுக்குள்ளேயே அடங்கி இருக்கின்றனர். ஆனால் நடிகைகளோ இக்காலத்தை அஸ்ஸர்ட்டாக பயன்படுத்துகின்றனர். காலை யோகா செய்வது முதல் இரவு படுக்கைக்கு செல்லும் வரை அனைத்தையும் வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிடுவதை தனது முழு பொழுதுபோக்காக செய்கின்றனர்.


அந்த வகையில் நைலா உஷாவும் வித விதமாக போட்டோ சூட் நடத்தியுள்ளார் புடவையிலும், மாடர்ன் உடையிலும் தனக்கு தானே போட்டா போட்டி போட்டுக்கொண்டு போட்டோக்களை பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படங்களை லைக்ஸ்களை அள்ளி வருகின்றன. சமீபத்தில் அவர் வெளியிட்டு இருக்கும் புகைபடங்கள் வைரலாக சமூக வலைத்தளங்களில் பரவிக்கொண்டிருக்கிறது. அதில் அவர் அணிந்திருக்கும் வெள்ளை சல்வார் பார்ப்பவர் கண்களுக்கு விருந்தளிக்கிறது .

சினிமாவில் சான்ஸ் கிடைக்காத நடிகைகளும், சான்ஸ் கிடைத்து ஹிட் ஆகாத நடிகைகளும் செய்யும் ஒரே வேலை போட்டோசூட் மட்டும் தான். தனது போட்டோஸ் மூலம் பல ரசிகர்களை தன் வசம் இழுகின்றனர். பிறகு படத்தில் நடித்தால் விளம்பரம் இல்லாமல் ஹிட் கொடுக்கலாம் என்பது அவர்களின் எண்ணம் .

பல ஹிட் படங்களை கொடுத்த இவர் தனது லைப்பின் அடுத்த கட்டத்திற்காக இந்த போட்டோ சூட் நடத்தி இருப்பார் போல. இப்படி செய்து பலர் ஹிட் படமும் கொடுத்துள்ளனர். இந்த பார்முலா இவருக்கு ஒர்க் அவுட் ஆகுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்..

வீடியோக்கள் எடுத்தும் சமூக வலைத்தளங்களில் போட்டோ வெளியிட்டு தனது ரசிகர்களுக்கு விருந்து வைக்கின்றனர் பல நடிகைகளுக்கு லைக்ஸ் கிடைப்பதால் அது தனது எதிர்கால படங்களுக்கு பயன்படும் என்று எண்ணுகின்றனர். போட்டோ எடுப்பது அவர்கள் வேலை கமெண்ட்ஸ் பல விதமாக கொடுப்பது ரசிகனின் கடமையாகி விடுகிறது.


Click it and Unblock the Notifications











