இத்தனை கேமரா சுத்தியிருந்தும் இந்த தடவு தடவுறானே.. ஹனி ரோஸ் ரியாக்‌ஷன் என்ன தெரியுமா?

சென்னை: நடிகை ஹனி ரோஸ், கோழிக்கோட்டில் புதிதாக திறக்கப்பட்ட நகைக்கடை விழாவில் பங்கேற்றபோது, அங்கு ஏற்பட்ட கட்டுக்கடங்காத கூட்டத்தை பயன்படுத்தி இங்கிருந்த சிலர், அவரின் இடுப்பில் கை வைத்து அநாகரீகமாக நடந்து கொண்டனர். இந்த வீடியோ தற்போது சமூகவலைத்தளத்தில் டிரெண்டாகி வருகிறது.

மலையான நடிகையான ஹானி ரோஸ் தமிழில் முதல் கனவே, சிங்கம்புலி, கந்தர்வன் உட்பட சில படங்களில் நடித்துள்ளார். தற்போது இவர் தமிழில் பெரிதாக நடிக்கவில்லை என்றாலும், தெலுங்கு, மலையாளத்தில் திரைப்படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். 2023 ஆம் ஆண்டு ஹனி ரோஷ் நந்தமுரி பாலகிருஷ்ணா நடிப்பில் வெளியான 'வீர சிம்ஹா ரெட்டி' தெலுங்கு படத்தில் அவருக்கு ஜோடியாகவும், அம்மாவாகவும் நடித்திருந்தார். பாலகிருஷ்ணாவுக்கு 62 வயது ஹனிக்கு 31 வயது என்பதால், இணையத்தில் இது ட்ரோல் செய்யப்பட்டது.

Honey Rose Malayalam actress

நடிகை ஹானி ரோஸ்: ஆனால், ஹானி ரோஸுக்கு அந்த படம் நல்ல பெயரை பெற்றுக்கொடுத்தது. தற்போது இவர், கடை திறப்பு விழா, நகை கடை திறப்பு விழா என பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார். தற்போது ஹானி ரோஸ் கேரள மாநிலம் கோழிக்கோட்டில் உள்ள நகைக்கடை திறப்பு விழாவில் கலந்து கொண்டார். அங்கு இவரை பார்க்க கட்டுக்கடங்காத கூட்டம் கூடியதால் அந்த கூட்டத்தில் சிக்கிக் கொண்டார். மேலும், அவருடன் செல்பி எடுக்க முயன்ற சிலர், அநாகரீகமாக, நடிகையின் இடுப்பில் கை வைத்துள்ளார். அந்த வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அத்துமீறிய ரசிகர்: நகைக்கடை திறப்பு விழாவில் பாதுகாப்புப் பணியாளர்கள் இருந்தபோதிலும் கூட்டத்தைச் சமாளிக்க முடியாமல் திணறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சம்பவத்திற்குப் பிறகு, நகைக்கடை உரிமையாளர் தனது வருத்தத்தைத் தெரிவித்ததுடன், வருங்கால நிகழ்வுகளில் சிறந்த பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்வதாக உறுதி அளித்துள்ளார். கடும் கூட்ட நெரிசல் காரணமாக, ஹனி ரோஸ் அந்த விழாவில் இருந்து பாதியிலேயே வெளியேறினார். பொது நிகழ்ச்சிகளுக்கு வரும் நடிகைகளிடம் ரசிகர்கள் இதுபோன்ற அநாகரீகமாக நடந்து கொள்வது தொடர்கதையாகி வருகிறது. அண்மையில் நிதி அகர்வால் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி ரசிகர்கள் அவரிடம் எல்லை மீறி நடந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X