'எலக்ட்ரா' நயனதாரா-மனிஷா கொய்ராலா!

இயக்குநர் ஷியாமாபிரசாத் இயக்கும் படம்தான் எலக்ட்ரா. ஒரு குடும்பத்தின் உறவுகளுக்குள் ஏற்படும் பிரச்சினைகளை அலசும் படமாம் இது. கிரேக்க நாடகத்தைத் தழுவி, அதன் அடிப்படையில் இந்தப் படத்தின் கதையை உருவாக்கியுள்ளார் ஷியாமாபிரசாத்.
இப்படத்தில் நாயகியாக நடிப்பவர் நயனதாரா. எலக்ட்ரா அலெக்சாண்டர் என்ற கேரக்டரில் நடிக்கிறார் நயனதாரா. அவருடைய பெற்றோராக நடிக்கிறார்கள் பிரகாஷ் ராஜும், மனிஷாவும்.
தமிழில் பல படங்களில் நடித்துள்ள மனிஷா, மலையாளத்தில் நடிப்பது இதுவே முதல் முறையாகும்.
ஏற்கனவே தமிழில் மாப்பிள்ளை படத்தில் தனுஷுக்கு மாமியாராக நடித்து வருகிறார் மனிஷா என்பது குறிப்பிடத்தக்கது.
More from Filmibeat
நயனதாரா பிரகாஷ் ராஜ் மனிஷா கொய்ராலா மலையாள திரைப்படம் எலக்ட்ரா malayalam cinema elektra manisha koirala nayanthara prakash raj


Click it and Unblock the Notifications











