உறவினரால் பாலியல் தொல்லை.. அவனுக்கு கடவுள் கொடுத்த தண்டனை என்ன தெரியுமா? நடிகை பேட்டி!

சென்னை: பாலியல் வன்கொடுமை குறித்து நாம் பேசிக்கொண்டு இருந்தாலும், இது எங்கோ ஒரு இடத்தில் நடந்து கொண்டு தான் இருக்கிறது. பெண்களுக்கு எதிராக நடக்கும் வன்கொடுமைக்கு கடுமையான சட்டங்கள் இருக்கும் போதும், இன்றும் பல பெண்கள் தங்களுக்கு எதிராக நடக்கும் கொடுமைகளை எதிர்த்து புகார் கொடுக்கத் தயங்குகிறார்கள். இப்படி தன் வாழ்க்கையில் நடந்த பாலியல் தொல்லை குறித்து நடிகை ஒருவர் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

மலையாள சீரியல் நடிகையான ஷ்ருதி ரஜினிகாந்த், மாடல் அழகி மற்றும் நடிகை ஆவார். இவர், ஃப்ளவர்ஸ் டிவியில் ஒளிபரப்பான சக்கப்பழம் என்ற மலையாள தொலைக்காட்சி தொடரின் மூலம் நடிகையாக மாறினார். ஆலப்புழாவில் உள்ள சின்மயா வித்யாலயாவில் பள்ளிப் படிப்பை முடித்த இவர், வயநாடு புல்பள்ளியில் உள்ள பழசிராஜா கல்லூரியில் BA பட்டம் பெற்றார். பின் கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் MA பட்டப்படிப்பை முடித்தார்.

Malayalam actress shruti Rajanikanth bold interview about sexual harassment by relative

சீரியல் நடிகை: மலையாளத் தொலைக்காட்சியில் பல சீரியல்களில் நடித்து பிரபலமான இவர், மீரா ஜஸ்மீன், நரேன் நடிப்பில் அண்மையில் வெளியாகி சச்சைப்போடு போட்ட குயின் எலிசபெத் என்ற மலையாள படத்தில் ரோஷினி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தற்போது ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ள நடிகை ஷ்ருதி ரஜினிகாந்த், சிறுவயதில் பாலியல் தொல்லைக்குள்ளானது பற்றி கூறியுள்ளார்.

Malayalam actress shruti Rajanikanth bold interview about sexual harassment by relative

பாலியல் சீண்டல்: அதில், என் குழந்தைப் பருவத்தில் பாலியல் சீண்டலுக்கு ஆளானேன். அது என் வாழ்வில் இருள் நிறைந்த பகுதியாகும். 5ஆம் வகுப்பு படிக்கும்போது இது நடந்தது. எனக்கு தொல்லை கொடுத்தது என் உறவினர் என்பதால். இதை நான் வெளியில் சொல்லவில்லை. குழந்தைகள் இதுபோன்ற விஷயங்களை சந்திக்கும்போது பயப்படாமல் இதுகுறித்து பெற்றோரிடம் தெரிவிக்க வேண்டும். பெண்கள் தைரியமாக இதனை எதிர்கொள்ள வேண்டும்.

Malayalam actress shruti Rajanikanth bold interview about sexual harassment by relative

கடவுள் தண்டனை கொடுத்துவிட்டார்: என்னை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கிய அந்த உறவினருக்கு இப்போது தான் திருமணமாகி பெண் குழந்தை பிறந்தது. பெண் குழந்தை பிறந்த பின்பு, என்னிடம் மன்னிப்பு கேட்டார். நான் நினைத்தால் இப்போதும் அவனை என் சொந்தங்கள் முன்னால் கேவலப்படுத்தி இருக்க முடியும் அந்த பயம் அவனுக்கு எப்போதும் உண்டு. இப்போது அவனுக்கு மகள் பிறந்திருப்பதால் இந்த குற்றவுணர்ச்சி இன்னும் அதிகமாகி இருக்கிறது என்பதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. வாழ்நாள் முழுக்க இது அவனுக்குத் தொடரும் நான் கொடுக்காத தண்டனையை கடவுள் அவனுக்கு கொடுத்துவிட்டார் என்றார்.

Malayalam actress shruti Rajanikanth bold interview about sexual harassment by relative

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X