Don't Miss!
- News சிரித்த முகத்துடன்.. "நெருப்பு குழிக்குள்" அந்த கடைசி நொடி.. சூரிய உதயத்தில் "அஸ்தமனமான" பெண்.. ஐயோ
- Technology போச்சு! Paytm-ஐ தொடர்ந்து Kotak Mahindra-க்கு ஆப்பு வைத்த RBI.. இனி உங்க Account, Credit Card-லாம் என்ன ஆகும்?
- Lifestyle இந்த உணவுகளை கண்டிப்பாக பிரஷர் குக்கரில் சமைக்கக்கூடாது.. ஏன் தெரியுமா?
- Finance டீ கடையில் கூட இப்ப கிரெடிட் கார்டு பேமெண்ட் தான்.. ரூ.1 லட்சம் கோடியை தாண்டி புதிய சாதனை..!
- Automobiles துபாயில் சென்னை விமானத்தை தவறவிட்ட 15 வயது சிறுமி! அடுத்து நடந்த விஷயம் தான் அதிசயம்!
- Sports தோனியே சரி.. முஸ்தஃபிசுர்-க்கு பதிலாக வரும் ஸ்பின்னர்.. சிஎஸ்கே அணியில் நடக்கப் போகும் மாற்றம்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
ஆபரணங்களால் உடலை மறைத்து..அரை நிர்வாண போட்டோஷூட் நடத்திய நடிகை..விளாசும் நெட்டிசன்ஸ்!
கேரளா : நடிகை ஜானகி சுதீரின் அரை நிர்வாண புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் பரவி வருகிறது. இந்த புகைப்படத்தை நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
மலையாள 'பிக் பாஸ்' போட்டியாளர் ஜானகி சுதீர் மற்றும் அமிர்தா வினோத் நடிப்பில் லெஸ்பியன் காதலை மையமாக வைத்து எடுக்கப்பட்ட மலையாளப் படமான 'Holy Wound' இன்று SS Frames- ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது.
அசோக் ஆர்.நாத் இயக்கிய இத்திரைப்படம், சிறுவயதிலிருந்தே காதலித்து, பின்னர் பிரிய வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்ட இரண்டு இளம் பெண்களின் கதையை சுற்றிய உருவான திரைப்படமாகும்.
சிவாஜி குடும்ப சொத்து வழக்கு...கோர்ட் போட்ட உத்தரவு...அடுத்து என்ன நடக்கும்?
லெஸ்பியன்
மலையாளத்தில் பெரும் சர்சையை கிளப்பியுள்ள ஹோலி வுண்ட் திரைப்படத்தில், விருப்பமின்றி திருமணம் செய்து கொண்டு பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகும் ஒரு பெண்ணும், வலுக்கட்டாயமாக கன்னியாஸ்திரி ஆக்கப்படும் இன்னொரு பெண்ணும் ஒரு கட்டத்தில் லெஸ்பியனாக மாறுவதுதான் இந்த படத்தின் கதை.
திரைப்பட விழாக்களில்
இத்திரைப்படம் சஹஸ்ராரா சர்வதேச திரைப்பட விழா, காஷிஷ் மும்பை சர்வதேச குயர் திரைப்பட விழா மற்றும் ஃபிரேம்லைன் சான் பிரான்சிஸ்கோ சர்வதேச LGBTQ திரைப்பட விழா உள்ளிட்ட பல திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டது. காதல் என்று வரும்போது அதற்கு பாலினம் முக்கியம் இல்லை என்பதை இப்படத்தின் வாயிலாக சொல்ல நினைத்தாக இயக்குநர் அசோக் கூறியிருந்தார்.
அரை நிர்வாண போஸ்டரை
இந்தபடத்தில், கன்னியாஸ்திரி லெஸ்பியனாக மாறுவது போல கதை உள்ளதால், அதற்கு படத்திற்கும் இந்த படத்தில் நடித்த நடிகை ஜானகி சுதீருக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. அந்த சர்ச்சை அடங்குவதற்குள் நடிகை ஜானகி சுதீர் அரை நிர்வாண போஸ்டரை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.
மேலாடை இல்லாமல்
அந்த போட்டோவில், இடுப்பில் மட்டும் உடை அணிந்து மேலே உடை எதுவும் போடாமல், நகைகளால் உடலை மறைத்தபடி போஸ் கொடுத்துள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து அவர் கண்டபடி விமர்சனம் செய்து வருகின்றனர். இருப்பினும் இது என்ன ஓணம் ஸ்பெஷலான என நக்கலாக கேட்டு வருகின்றனர்.