கார்த்திகாவை நாடும் மலையாளம்
தூத்துக்குடி நாயகி கார்த்திகாவைத் தேடி மலையாளப் பட வாய்ப்புகள் நிறைய வருகிறதாம்.
| Click here for more images |
தூத்துக்குடி மூலம் நடிக்க வந்தவர் கார்த்திகா. முதல் படத்திலேயே விறுவிறுப்பாக பேசப்பட்ட கார்த்திகாவைத் தேடி நிறைய தமிழ்ப் படங்கள் வந்தன.
ஆனால் கிளாமர் காட்டவே மாட்டேன், ஆபாசமாக உடை அணிந்து நடிக்க மாட்டேன் என ஏகப்பட்ட கண்டிஷன்களை கார்த்திகா போட்டதால் அவரைத் தேடி வந்த பல வாய்ப்புகள் ஜகா வாங்கின.
இருந்தாலும் சற்றும் கலங்காத கார்த்திகா, கிளாமர் காட்டி நடிக்கவே மாட்டேன் என்பதில் பிடிவாதமாக இருக்கிறார். என்னைத் தேடி வரும் வாய்ப்புகளில் நான் நடித்து விட்டுப் போகிறேன், கிளாமராக நடித்துத்தான் ஆக வேண்டும் என்ற கட்டாயம் எனக்கு இல்லை என்றும் தைரியமாக கூறி வருகிறார்.
இந்த நிலையில் கார்த்திகாவை தனது நான் கடவுள் படத்தில் நடிக்க வைக்க பாலா முயன்றார். இதற்காக கார்த்திகாவைக் கூப்பிட்டு பெரியகுளம் வீதிகளில் பிச்சை எடுக்க வைத்தும் டெஸ்ட் செய்தார். ஆனாலும் பாலாவுக்கு திருப்தி வரவில்லை. இதனால் பாலாவின் படத்தில் நடிக்க வந்த வாய்ப்பு கார்த்திகாவை விட்டு நழுவிப் போனது.
இந்த விசனத்தில் இருந்து வந்த கார்த்திகாவுக்கு திருப்தி அளிக்கும் வகையில், மலையாளத்திலிருந்து சில பட வாய்ப்புகள் வந்திருக்கிறதாம். இந்தப் படங்களில் கிளாமருக்கு வாய்ப்பில்லை என்பதால் நடிக்கலாமா என்ற யோசனையில் உள்ளாராம் கார்த்திகா.
அதேசமயம், இன்னும் கொஞ்ச நாளைக்கு தமிழில் இருந்து விட்டு பிறகு மலையாளத்திற்குப் போகலாமா என்ற யோசனையும் அவரை குழப்பிக் கொண்டிருக்கிறதாம்.
எங்கு நடித்தாலும் கிளாமர் மட்டும் கிடையவே, கிடையாது என்பதில் தொடர்ந்து கார்த்திகா தீவிரமாக உள்ளாராம்.


Click it and Unblock the Notifications











