தமிழ் பேசும் சனா 'சேச்சி'!

மும்பையிலிருந்து தமிழுக்கு வந்தவர் சனா கான். முதல் படமான சிலம்பாட்டத்தின் மூலம் ரசிகர்களைக் கவர்ந்த சனா இன்னும் தமிழில் பெரிய இடத்தைப் பிடிக்கவில்லை.
இருந்தாலும் தொடர்ந்து சனா கான் தமிழ் சினிமாவில்தான் உலவி வருகிறார். அவரது முயற்சியின் விளைவாக சில நல்ல படங்கள் அவரைத் தேடி வருகிறதாம்.
மற்ற மும்பை நடிகைகளைப் போல இல்லாமல், சனா கான் தமிழில் நன்றாகப் பேசுகிறார். என்ன காரணம் என்று பார்த்தால், அவருடைய அப்பா மலையாளியாம், அம்மா மட்டும்தான் மும்பையாம். அப்பா வழியாக மலையாளமும் நன்றாகப் பேசத் தெரியுமாம் சனாவுக்கு. மலையாளம் பேசத் தெரிந்த அவருக்கு தமிழ் பெரிய கஷ்டம் இல்லை என்பதால்தான் தமிழிலும் ஓரளவு நன்றாகவே பேசுகிறாராம் சனா.
தான் ஒரு பாதி மலையாளி என்பதால் தமிழுக்கும், தனக்கும் நெருக்கம் அதிகம் என்றும் கூறுகிறார் சனா கான்
தற்போது அம்மணி கையில் சாந்துப் பொட்டு, ஆயிரம் விளக்கு என இரு படங்கள் உள்ளனவாம். சவால் தரும் வகையிலான கேரக்டர்களில் நடிக்க தான் தயாராக இருப்பதாக கூறும் சனா, அதற்காக காத்திருக்கிறாராம்.


Click it and Unblock the Notifications











