»   »  'பிகினி' மலாய்கா!

'பிகினி' மலாய்கா!

Posted By:
Subscribe to Oneindia Tamil


'சய்ய சய்ய சய்யா' என்று ஓடும் ரயிலில் கிளாமர் ஆட்டத்தில் உருக வைத்த மலாய்கா அரோரா, பிகினி உடையில் வந்து பார்வையாளர்களின் நெஞ்சங்களை மலைக்க வைக்கப் போகிறார்.

Click here for more images

தில்சே (தமிழில் 'உயிரே') படத்தில் ஓடும் ரயிலில் ஷாருக்கானுடன் அசத்தல் ஆட்டம் போட்டவர் மலாய்கா அரோரா. அந்த ஒற்றைப் பாட்டுதான் இன்று வரை மலாய்காவின் முகவரியாக உள்ளது.

மாக்ஸிம் இதழில் கவர்ச்சிகரமான பிரா, பேண்டீஸ் உடையுடன் தோன்றி பரபரப்பையும் ஏற்படுத்தியவர் மலாய்கா. இந்த நிலையில் கோவாவில் நடைபெறவுள்ள மிஸ் பிகினி 2007 போட்டியில் மலாய்காவும் பங்கேற்று நீச்சல் உடையில் தரிசனம் தரப் போகிறார்.

இதுகுறித்து மலாய்காவின் செயலாளர் தீபாலி கூறுகையில், கோவா நிகழ்ச்சியில் கலந்து கொள்வது குறித்து தீவிரமாக பரிசீலித்துக் கொண்டிருக்கிறார் மலாய்கா.

இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக அவர் பங்கேற்பார். நீச்சல் உடையில் வருவார் என்றார்.

முதலில் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள மறுத்தாராம் மலாய்கா. ஆனால் இந்த நிகழ்ச்சி மூலம் வசூலாகும் தொகை, பல்வேறு அறக்கட்டளைகள், மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருக்கும் ஏழைப் பெண்களின் மறுவாழ்வுக்கு வழங்கப்படுவதால் நிகழ்ச்சியில் பங்கேற்க முடிவு செய்தாரம் மலாய்கா.

மலாய்கா சிறப்பான உடல்வாகுடன் இருப்பதால் அவர் பிகினி உடையில் தோன்றினால் சிறப்பாக இருக்கும் என நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவிக்கவே அதை ஏற்றுக் கொகாண்டுள்ளாராம் மலாய்கா.

மலாய்கா வந்தாஅந்த இடமே மலைத்துப் போய் விடாது!

Read more about: maliaka

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil