»   »  வலுவடையும் மல்லிகா!

வலுவடையும் மல்லிகா!

Posted By:
Subscribe to Oneindia Tamil

கம கம மல்லிகா கபூர் சந்தோஷமாகியிருக்கிறார். எல்லாம் தமிழில் புதுப் பட வாய்ப்புகள் வந்து குவியஆரம்பித்திருப்பதால்தான்.

அழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறது மூலம் தமிழுக்கு வந்தவர் மல்லிகா கபூர். அதற்கு முன்புமலையாளத்தில் அற்புதத் தீவு படத்திலும் திறமை காட்டியிருந்தார்.கிளாமரில் கில்லியாக துள்ளி ஆட தயார் என்று தமிழுக்கு வருவதற்கு முன்பே ஸ்டேட்மென்ட் விட்டவர்மல்லிகா. இதனால் அவரது வருகை இயக்குநர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.

துரதிர்ஷ்டவசமாக முதல் படமான அழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறது சரியாக போகவில்லை. இதனால்மல்லிகாவை ராசியில்லாத நடிகை பட்டியலில் சேர்த்து விட்டது கோலிவுட். ஆனால் சமீபத்தில் வெளியானவாத்தியார் படத்தில் மல்லிகாவன் அவிழாட்டத்தைப் பார்த்து அரண்டு போய் விட்டனராம் தயாரிப்பாளர்களும்,இயக்குநர்களும்.

கிளாமர் கலக்கலில் மல்லிகாவின் அழகைப் பார்த்து வியந்து போன பல தயாரிப்பாளர்கள் மல்லிகாவைத் தேடிபெட்டியோடு ஓட ஆரம்பித்திருக்கிறார்களாம். இதனால் சந்தோஷமாகியுள்ளார் மல்லிகா. இதைத்தான்எதிர்பார்த்தேன், லேட்டாக வந்தாலும், லேட்டஸ்டாக எல்லாம் கூடி வர ஆரம்பித்திருப்பதால் குஷியாக கதைகேட்க ஆரம்பித்திருக்கிறார் மல்லிகா.

விதம் விதமான கேரக்டர்களில் நடித்து தமிழ் ரசிகர்களை ரண்டக்க ரண்டக்க என ஆட விட திட்டமிட்டுள்ளாராம்மல்லிகா. எப்படிப்பட்ட ரோலானாலும் சரி, எனது முத்திரையை அதில் பதிக்காமல் விட மாட்டேன், கிளாமராகஇருந்தாலும் சரி, நடிப்பாக இருந்தாலும் சரி பின்னிடுவேன என பெருமையாக கூறும் மல்லிகாவுக்கு இப்போதுபுதிதாக தமிழில் 2 படம் வந்துள்ளதாம்.

வாத்தியார் படத்தில் மல்லிகாவுக்கு கிளாமர் சைடை தூக்கலாக வைக்குமாறு படத்தின் நாயகன் அர்ஜூன்தான்பரிந்துரைத்தவராம். இயக்குநர் வெங்கடேஷிடம், மல்லிகாவின் திறமையை எடுத்துக் கூறி இவரது கிளாமர்சைடை தூக்கலாக வைத்தால் படத்திற்குக் கூடுதல் பலம் என்று கூறியதால் அவரும் கலக்கி விட்டார்.

தனது ஏற்றத்திற்கு அர்ஜூன்தான் முக்கியக் காரணம் என மல்லிகாவும் புளகாங்கிதம் அடைகிறார். கிளாமர்காட்டினாலும் அதில் அறுவெறுப்பு இல்லாமல், அழகாக காட்ட வேண்டும் என்ற பாலிசி உடையவராம் மல்லிகா.எனவே நான் கிளாமராக நடித்தாலும் முகம் சுளிக்க வைக்காது என்று புன்னகை பூக்கிறார்.

சரிதான்!

Read more about: mallika kapoors 2nd innings

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil