»   »  கடுப்படிக்கும் மல்லிகா!

கடுப்படிக்கும் மல்லிகா!

Subscribe to Oneindia Tamil

கமல்ஜி, கமல்ஜி என வாய் வலிக்க கமல் புராணம் பாடி வந்த மல்லிகா ஷெராவத்,கமலுக்கே ஆப்பு வைப்பது போல, தசாவதாரம் படப்பிடிப்பில் பந்தா காட்டிகடுப்படித்து வருகிறாராம்.

மல்லிகாவை ஜாக்கி சானுக்கு இஎந்தைய மல்லிகா, பிந்தைய மல்லிகா எனஇரண்டாகப் பிரிக்கலாம். முந்தைய மல்லிகா வெறும் கிளாமர் தீவிரவாதியாக மட்டும்இருந்தார். ஆனால் ஜாக்கியுடன் ஜோடி போட்ட பின்னர் திமிர்வாத கிளாமர்நாயகியாக மாறி விட்டார்.

மல்லிகாவின் அசத்தல் கிளாமர் உடல் வாகுக்காவே அவருக்கு பல படங்கள் புக் ஆகிவருகின்றன. இதை புரிந்துதான் மல்லிகாவும் குண்டக்க மண்டக்க பந்தா காட்டிதயாஒஊப்பாளர்களுக்கும், இயக்குநர்களுக்கும் டென்ஷன் கொடுத்து வருகிறார்.

இருந்தாலும் மல்லிகா கணக்கில் வேறு எந்த திம்சும் இப்போதைக்கு இல்லைஎன்பதால் அவரது இம்சைகளை பொறுத்துக் கொண்டு பொழப்பை ஓட்டிவருகிறார்கள்.

வடக்கில்தான் பந்தா காட்டுகிறார் என்றால், அதில் சற்றும் குறைச்சல் இல்லாமல்தெற்கிலும் தெனாவட்டு காட்டுகிறார் மல்லிகா. சமீபத்தில் மலையாளப் படம் ஒன்றில்குத்துப் பாட்டு ஆடுவதற்காக கேரளாவுக்குப் போன மல்லிகா, அங்கே ஐந்து நட்சத்திரஹோட்டலில்தான் தங்குவேன் என்று அடம் பிடித்து அழிச்சாட்டியம் செய்திருக்கிறார்.

சுத்துப்பட்டில் ஐந்து நட்சத்திர ஹோட்டல் இல்லை என்று யூனிட்டார் கூறியதால்சொல்லாமல் கொள்ளாமல் கிளம்பி ஊரைப் பார்க்கப் போய் விட்டாராம். மல்லுவேட்டிக்காரர்கள் ஏண்டா ஓணானைப் பிடித்தோம், வேட்டிக்குள் விட்டோம் என்றுபுலம்பிக் கொண்டிருக்கிறார்களாம்.

இப்போது அதேபோன்ற அலப்பறையை கமலிடம் காட்ட ஆரம்பித்துள்ளாராம்மல்லிகா. கமலின் தீவிர ரசிகை நான் என்று பரவசமாக கூறி வருபவர் மல்லிகா.தசாவதாரம் படத்தில் அவரை கமல் புக் செய்தபோது புளகாங்கிதமடைந்து போனார்.

கமலைப் பற்றி ஆஹா, ஓஹோ என்று புகழ்ந்து தள்ளினார். கமலுடன் செல்போனில்விடாமல் பேசி அவரிடம் நேரடியாகவும் தனது பாராட்டைத் தெரிவித்தார்.அப்படியாப்பட்ட மல்லிகா இப்போது கமலுக்கு கடுப்பேற்றும் வகையில் நடந்துகொள்ள ஆரம்பித்துள்ளாராம்.

சில வாரங்களுக்கு முன் தசாவதாரம் படப்பிடிப்புக்கான அனைத்து ஏற்பாடுகளையும்செய்து முஎடித்து விட்டு கமல் உள்ளிட்ட அனைவரும் ஷூட்டிங்குக்குத் தயாராகஇருந்தனர். ஆனால் மல்லிகாவைக் காணவில்லை. இதனால் 2 நாட்கள் படப்பிடிப்புரத்தாகியுள்ளது.

2 நாள் கழித்து வந்த மல்லிகா, கிளைமேட் சரியில்லை, இப்படிப்பட்ட சூழலில்நடித்தால் எனது உடலுக்கு ஒத்துவராது என்று கூறி ஹோட்டலை விட்டு வராமல்அடைந்து கிடந்தாராம்.

செட்டில் காத்திருந்த கமலோ கடுப்பின் உச்சிக்கே போய் விட்டாராம். இருந்தாலும்சில்லறைப் பிரச்சினைக்காக படப்பிடிப்பு பாதிக்கப்படக் கூடாது என்பதற்காகமல்லிகாவின் வசதியைக் கேட்டு அந்த நாளில் ஷூட்டிங்கை நடத்தினார்களாம்.

கமலையே கடுப்படித்து விட்டாரே என்று யூனிட்டார் வெதும்பிப் பாய்விட்டார்களாம். இருந்தாலும் கமல் கண்டுகொள்ளவில்லையாம் (இப்படி எத்தனைஎகத்தாளினிகளை பார்த்திருப்பார் அவர்!)

மல்லிகா பற்றி கமலுக்கு நன்கு தெரியும் என்பதால் அவர் கேட்ட சம்பளத்தைஅப்படியே கொடுக்க ஏற்பாடு செய்தார். அத்தோடு, அவர் கேட்கும் வசதிகளையும்செய்து தருமாறு தயாரிப்பாளருக்கு அறிவுறுத்தியிருந்தார்.

அடுத்து, மல்லிகாவைப் பற்றிய ஒரு நல்ல மேட்டர். மணிரத்தினத்தின் குரு படத்தில்மல்லிகா ஷெராவத்தும் தலை காட்டியுள்ளது தெரிந்த சேதிதான். தெ>யாத விஷயம்,ஹீரோயின் ஐஸ்வர்யா ராய்க்கும், மல்லிகாவுக்கும் டான்ஸில் கடும் போட்டியேநடந்துள்ளது.

இப்படத்தின் டான்ஸ் மாஸ்டரான பிருந்தா இதை விளக்குகிறார். மய்யா மய்யாமய்யா பாட்டில், மல்லிகாவுக்கு சில சிரமமான மூவ்மென்ட்டுகளை வைத்திருந்தேன்.இது அரபு இசையில் அமைந்த பாடல். மிக அருமையாக மெட்டமைத்திருக்கிறார்ரஹ்மான்.

இந்தப் பாட்டுக்கு ஆடுவதற்காக சென்னைக்கு வந்திருந்த மல்லிகா 2 நாட்கள் ரிகர்சல்எடுத்துக் கொண்டார். முடித்தவுடன் பாட்டுக்கு ரெடியானார். ஆனால் 3 நாட்கள்ஆயிற்று பாட்டை முடிக்க.

இந்தப் பாட்டுக்காக நான் போட்டிருந்த சிரமமான அசைவுகளையும் மிக அழகாகசெய்திருக்கிறார் மல்லிகா. அவர் பெரிய மனதுக்காரர் (ஆமாமாமா!). கஷ்டமானமூவ்மென்ட் ஆச்சே என்று முகம் சுளிக்காமல் சவாலாக எடுத்துக் கொண்டு ஆடினார்.

ஆனால் ஐஸ்வர்யாவுடன் ஒப்பிடுகையில், மல்லிகாவுக்கு 2வது இடம்தான். சின்னசின்ன அசைவுகளில் கூட ஐஸ் பின்னி எடுத்து விடுகிறார் என்றார் பிருந்தா.

ஐஸ் டான்ஸில் பின்னுகிறார், மல்லிகாவோ அலம்பலில் துள்ளுகிறார்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil