புலியாய் பாயும் மல்லிகா!

By Staff

மல்லிகா கபூருக்கு மறுபடியும் ஒரு வாய்ப்பு. ஜித்தன் ரமேஷுடன் இணைந்து புலி வருது படத்தில் ஜோடி போட கூப்பிட்டிருக்கிறார்களாம்.

அழகாய் இருக்கிறாய், பயமாய் இருக்கிறது படம் மூலம் சென்னைக்கு வந்தவர் மல்லிகா. முதல் படம் முதலுக்கு மோசமில்லை என்றாலும்,மல்லிகா கபூருக்கு கொஞ்சம் போல வெளிச்சம் போட்டுக் காட்டியது.

ஆனாலும் வாய்ப்புகள் என்னவோ பிரமாதமாக இல்லை. அர்ஜூன் பார்த்து தனது வாத்தியார் படத்தில் மல்லிகாவின் திறமையை வாசிக்கவிட்டார். அவர் போட்ட கிளாமர் போட்டில், ஓரிரு வாய்ப்புகள் எட்டிப் பார்த்தன.

இடையில் காணாமல் போய் விட்ட மல்லிகாவுக்கு இப்போது மறுபடியும் ஒரு வாய்ப்பு. ஜித்தன் ரமேஷ் சின்ன இடைவெளிக்குப் பிறகு மீண்டும்நடிக்க வருகிறார். புலி வருது என்று படத்திற்குப் பெயர். மனதோடு மழைக்காலம் படத்தைத் தயாரித்த ஆண்டனிதான் இப்படத்தைத் தயாரிக்கிறார்.

தரணி, மகாராஜன் ஆகியோ>ன் உதவியாளர் ஜி.வி.குமார் இயக்குகிறார். இதில் ரமேஷுக்கு ச>யான ஜோடியைத் தேடி அலையோ அலை என்றுஅலைந்திருக்கிறார்கள். கடைசியாக கிடைத்தவர்தான் கபூர். கால்ஷீட் கேட்டதும் உடனே ஓ.கே சொன்ன மல்லிகா கபூரை கப்பென்று பிடித்துப்போட்டு விட்டனர்.

வித்தியாசமான ஆக்ஷன் படமாக புலி வருது இருக்குமாம். மல்லிகாவுக்காக கிளாமர் போர்ஷனையும், போதையாக உரு ஏற்றி உள்ளனராம்.இதுவரை இல்லாத அளவுக்கு வித்தியாசமான ஆக்ஷனும், விரசம் இல்லாத கிளாமரும் சரிவிகிதத்தில் கலந்த நல்ல டிகாக்ஷனாக இருக்குமாம் புலிவருது.

நல்லா பாயட்டும்!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X