»   »  கமல் படத்தில் மல்லிகா ஷெராவத்! கமல்ஹாசனின் தசாவதாரம் படத்தின் 2வது நாயகியாக மல்லிகா ஷெராவத்தை பேசிமுடித்துள்ளார்கள்.தசாவதாரம் படத்தில் 10 கெட்டப்களில் நடிக்கும் கமலுக்கு ஜோடியை முடிவுசெய்வதற்குள் ரஜினியின் சிவாஜி ரிலீஸ் ஆகிவிடும் போல. அந்த அளவுக்கு ஆள்கிடைக்காமல் படு பாடு பட்டு வருகிறார்கள் கமலும், இயக்குனர்கே.எஸ்.ரவிக்குமாரும்.த்ரிஷா, நயனதாரா, வித்யா பாலன் என பலரையும் அணுகி கால்ஷீட் இல்லாதகாரணத்தால் அவர்களால் நடிக்க முடியாமல் போனது. இதனால் களைத்துப் போனகமல் அன் கோவுக்கு கை கொடுத்தார் அசின். கமலின் நான்கு ஜோடிகளில் ஒருவராகஅசின் புக் ஆகியுள்ளார்.இந் நிலையில் இப்போது 2வது நாயகியையும் பிடித்து விட்டார்கள். படு பயங்கரகவர்ச்சியால் பாலிவுட் ரசிகர்களை பதை பதைக்க வைத்து வரும் மல்லிகாஷெராவத்திடம் தசாவதாரம் படத்தில் நடிக்க வேண்டும் என்று அணுகியபோது அவர்முதலில் பேசியது சம்பளம் குறித்துத்தானாம்.இளம் தமிழ் சூப்பர் ஸ்டார்கள் கேட்கும் அளவுக்கு முதலில் சம்பளம் கேட்டுள்ளார்மல்லிகா. அப்படி, இப்படிப் பேசி ஒருரேட்டை பேசி முடித்து புக் செய்துள்ளார்களாம்.அப்படியும் கூட செம டப்புக்குத்தான் மல்லிகா தலையை ஆட்டியுள்ளாராம். அதாவதுஅசின் வாங்கும் சம்பளத்தை விட 2 மடங்கு அதிக சம்பளமாம்.மல்லிகா ஷெராவத் தமிழ்ப் படத்தில் ஹீரோயினாக நடிப்பது இதுவே முதல் முறை.ஏற்கனவே சிரஞ்சீவியின் ஸ்டாலின் படத்தில் ஒரு பாட்டுக்கு ஆட அவரைஅணுகியபோது ரூ. 1 கோடி வரை துட்டு கேட்டாராம். தூக்கிக் கொடுக்கும்தெலுங்குக்காரர்களுக்கே அது பெரிய அதிர்ச்சியாகி விட்டதாம்.இம்புட்டுக் கொடுத்து இவரை ஆட விடுவதற்குப் பதில் வேறு யாரையாவது போட்டுக்கொள்ளலாம் என்ற முடிவுக்கு வந்து மல்லிகாவை டிராப் செய்து விட்டனர்.சிரஞ்சீவிக்குப் படியாதவர் இப்போது கமலுக்குப் படிந்துவந்துள்ளார். மதமத மல்லிகாநடிக்கவிருப்பதால் அவருக்கேற்ற வகையிலான காட்சிகளும் இருக்கும் என்றுநம்பலாம்.

கமல் படத்தில் மல்லிகா ஷெராவத்! கமல்ஹாசனின் தசாவதாரம் படத்தின் 2வது நாயகியாக மல்லிகா ஷெராவத்தை பேசிமுடித்துள்ளார்கள்.தசாவதாரம் படத்தில் 10 கெட்டப்களில் நடிக்கும் கமலுக்கு ஜோடியை முடிவுசெய்வதற்குள் ரஜினியின் சிவாஜி ரிலீஸ் ஆகிவிடும் போல. அந்த அளவுக்கு ஆள்கிடைக்காமல் படு பாடு பட்டு வருகிறார்கள் கமலும், இயக்குனர்கே.எஸ்.ரவிக்குமாரும்.த்ரிஷா, நயனதாரா, வித்யா பாலன் என பலரையும் அணுகி கால்ஷீட் இல்லாதகாரணத்தால் அவர்களால் நடிக்க முடியாமல் போனது. இதனால் களைத்துப் போனகமல் அன் கோவுக்கு கை கொடுத்தார் அசின். கமலின் நான்கு ஜோடிகளில் ஒருவராகஅசின் புக் ஆகியுள்ளார்.இந் நிலையில் இப்போது 2வது நாயகியையும் பிடித்து விட்டார்கள். படு பயங்கரகவர்ச்சியால் பாலிவுட் ரசிகர்களை பதை பதைக்க வைத்து வரும் மல்லிகாஷெராவத்திடம் தசாவதாரம் படத்தில் நடிக்க வேண்டும் என்று அணுகியபோது அவர்முதலில் பேசியது சம்பளம் குறித்துத்தானாம்.இளம் தமிழ் சூப்பர் ஸ்டார்கள் கேட்கும் அளவுக்கு முதலில் சம்பளம் கேட்டுள்ளார்மல்லிகா. அப்படி, இப்படிப் பேசி ஒருரேட்டை பேசி முடித்து புக் செய்துள்ளார்களாம்.அப்படியும் கூட செம டப்புக்குத்தான் மல்லிகா தலையை ஆட்டியுள்ளாராம். அதாவதுஅசின் வாங்கும் சம்பளத்தை விட 2 மடங்கு அதிக சம்பளமாம்.மல்லிகா ஷெராவத் தமிழ்ப் படத்தில் ஹீரோயினாக நடிப்பது இதுவே முதல் முறை.ஏற்கனவே சிரஞ்சீவியின் ஸ்டாலின் படத்தில் ஒரு பாட்டுக்கு ஆட அவரைஅணுகியபோது ரூ. 1 கோடி வரை துட்டு கேட்டாராம். தூக்கிக் கொடுக்கும்தெலுங்குக்காரர்களுக்கே அது பெரிய அதிர்ச்சியாகி விட்டதாம்.இம்புட்டுக் கொடுத்து இவரை ஆட விடுவதற்குப் பதில் வேறு யாரையாவது போட்டுக்கொள்ளலாம் என்ற முடிவுக்கு வந்து மல்லிகாவை டிராப் செய்து விட்டனர்.சிரஞ்சீவிக்குப் படியாதவர் இப்போது கமலுக்குப் படிந்துவந்துள்ளார். மதமத மல்லிகாநடிக்கவிருப்பதால் அவருக்கேற்ற வகையிலான காட்சிகளும் இருக்கும் என்றுநம்பலாம்.

Posted By:
Subscribe to Oneindia Tamil

கமல்ஹாசனின் தசாவதாரம் படத்தின் 2வது நாயகியாக மல்லிகா ஷெராவத்தை பேசிமுடித்துள்ளார்கள்.

தசாவதாரம் படத்தில் 10 கெட்டப்களில் நடிக்கும் கமலுக்கு ஜோடியை முடிவுசெய்வதற்குள் ரஜினியின் சிவாஜி ரிலீஸ் ஆகிவிடும் போல. அந்த அளவுக்கு ஆள்கிடைக்காமல் படு பாடு பட்டு வருகிறார்கள் கமலும், இயக்குனர்கே.எஸ்.ரவிக்குமாரும்.

த்ரிஷா, நயனதாரா, வித்யா பாலன் என பலரையும் அணுகி கால்ஷீட் இல்லாதகாரணத்தால் அவர்களால் நடிக்க முடியாமல் போனது. இதனால் களைத்துப் போனகமல் அன் கோவுக்கு கை கொடுத்தார் அசின். கமலின் நான்கு ஜோடிகளில் ஒருவராகஅசின் புக் ஆகியுள்ளார்.


இந் நிலையில் இப்போது 2வது நாயகியையும் பிடித்து விட்டார்கள். படு பயங்கரகவர்ச்சியால் பாலிவுட் ரசிகர்களை பதை பதைக்க வைத்து வரும் மல்லிகாஷெராவத்திடம் தசாவதாரம் படத்தில் நடிக்க வேண்டும் என்று அணுகியபோது அவர்முதலில் பேசியது சம்பளம் குறித்துத்தானாம்.

இளம் தமிழ் சூப்பர் ஸ்டார்கள் கேட்கும் அளவுக்கு முதலில் சம்பளம் கேட்டுள்ளார்மல்லிகா. அப்படி, இப்படிப் பேசி ஒருரேட்டை பேசி முடித்து புக் செய்துள்ளார்களாம்.

அப்படியும் கூட செம டப்புக்குத்தான் மல்லிகா தலையை ஆட்டியுள்ளாராம். அதாவதுஅசின் வாங்கும் சம்பளத்தை விட 2 மடங்கு அதிக சம்பளமாம்.


மல்லிகா ஷெராவத் தமிழ்ப் படத்தில் ஹீரோயினாக நடிப்பது இதுவே முதல் முறை.ஏற்கனவே சிரஞ்சீவியின் ஸ்டாலின் படத்தில் ஒரு பாட்டுக்கு ஆட அவரைஅணுகியபோது ரூ. 1 கோடி வரை துட்டு கேட்டாராம். தூக்கிக் கொடுக்கும்தெலுங்குக்காரர்களுக்கே அது பெரிய அதிர்ச்சியாகி விட்டதாம்.

இம்புட்டுக் கொடுத்து இவரை ஆட விடுவதற்குப் பதில் வேறு யாரையாவது போட்டுக்கொள்ளலாம் என்ற முடிவுக்கு வந்து மல்லிகாவை டிராப் செய்து விட்டனர்.


சிரஞ்சீவிக்குப் படியாதவர் இப்போது கமலுக்குப் படிந்துவந்துள்ளார். மதமத மல்லிகாநடிக்கவிருப்பதால் அவருக்கேற்ற வகையிலான காட்சிகளும் இருக்கும் என்றுநம்பலாம்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil