»   »  வில்லிகா ஷெராவத்!

வில்லிகா ஷெராவத்!

Subscribe to Oneindia Tamil

கமல் படத்தில் நடிக்கப் போகும் மல்லிகா ஷெராவத், கமலுடன் சேர்ந்து நடிக்க ரொம்பஆர்வமாக இருக்கிறாராம். அதை விட சுவாரஸ்யமானது, கமலை நேரில் சந்தித்துப்பேச அலையோ அலை என்று அலைந்து ஒரு வழியாக சந்தித்து விட்டாராம்.

தசாவதாரம் படத்தின் நாயகிகளைப் பிடித்துப் போடுவதற்குள்கே.எஸ்.ரவிக்குமாருக்கும், கமலுக்கும் தாவு தீர்ந்து விட்டதாம். யார் யாரையோஅணுகி யாரும் சிக்காமல் கடைசியில் அசின், பூமிகா, மல்லிகா ஷெராவத்தைமுடித்துள்ளனர்.

இதில் அசினுக்கு டபுள் ரோல் கொடுக்கப் போகிறார்களாம்.மல்லிகாவுக்கு கிளாமர் ரோல் தானே என்று கேட்கலாம். அது மட்டும் இல்லையாம்,அட்டகாசமான வில்லி ரோலில் தான் அசத்தப் போகிறாராம் மல்லிகா ஷெராவத்.

மல்லிகாவை கமல் புக் செய்த விதமே படு சூப்பராக இருக்கிறது. மணிரத்தினம்இயக்கும் குரு இந்திப் படத்தில் மல்லிகா ஒரு குத்தப் பாட்டுக்கு கும்மியுள்ளார்.இதற்காக சமீபத்தில் சென்னைக்கு வந்திருந்தார்.

அவர் வந்ததை அறிந்த கமல், மல்லிகாவை செல்லில் பிடித்துள்ளார். கமல் குரலைக்கேட்டதும் சொக்கிப் போனாராம் மல்லிகா. ஜி, சொல்லுங்க என்று உற்சாகமாகபேசியுள்ளார். நீங்க என்னுடைய தசாவதாரம் படத்தில் நடிக்க வேண்டும் என்று கமல்சொல்ல உடனே ஒ.கே. சொல்லிவிட்டாராம்.

எப்போ நாம சந்திக்கலாம் என்று அடுத்து கேட்டுள்ளார். அதை காதில் வாங்கிக்கொள்ளாத, கமல், நீங்கள் வில்லியாக நடிக்க வேண்டும் என்று கூறியுள்ளார். நீங்கள்சொன்னால் நிச்சயம் நான் கேட்பேன், உங்களது படத்தில் என்ன கேரக்டர்வேண்டுமானாலும் நடிக்கிறேன் என்ற மல்லிகா, உங்களை நேரில் சந்திக்க வேண்டுமேப்ளீஸ் என்று கெஞ்சலாக கூறியுள்ளார்.

பார்க்காமல் விட மாட்டார் போல என்று நினைத்த கமல், இல்லை இப்போது பிசியாகஇருக்கிறேன். இன்னொரு சந்தர்ப்பத்தில் பார்க்கலாமே என்று கூறியுள்ளார். ஆனாலும்விடாத மல்லிகா, ஐந்து நிமிடம் போதும் கமல்ஜி, பார்த்துப் பேச வேண்டும் என்றுஅடம் பிடித்துள்ளார்.

சரி என்று வரச் சொன்னார் கமல். பறந்து போனார் மல்லிகா. கமலை பார்த்துபேசியவுடன் தான் அவருக்கு நிம்மதியே வந்ததாம். அந்த சந்திப்பின் போது படத்தின்கதையைச் சொன்னாராம் கமல். திருப்தி தெரிவித்த மல்லிகா, வில்லியாகநடிப்பதுதான் கொஞ்சம் சங்கடமாக இருக்கிறது என்று கூறியுள்ளார்.

உடனே கமல், சம்பளம் இரட்டிப்பாக கிடைக்கும், கவலைப்படாதீங்க என்று மல்லிகாநெஞ்சில் பால் வார்த்தாராம். உடனே சந்தோஷமான மல்லிகா, அப்படின்னாஓ.கே.தான் என்று சிரித்தபடி கமலிடமிருந்து விடைபெற்றாராம்.

அழகான வில்லியாக மல்லிகாவை ரசிக்க காத்திருப்போம்!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil