»   »  மலைக்க வைக்கும் மல்லிகா!

மலைக்க வைக்கும் மல்லிகா!

Posted By:
Subscribe to Oneindia Tamil

இந்திப் படங்களுக்கும், ஆங்கிலப் படங்களுக்கும் இணையான கிளாமரை தசாவதாரம் படத்தில்கொடுத்திருப்பதாக சந்தோஷமாக கூறுகிறார் மல்லிகா ஷெராவத்.

ஜாக்கி சானுடன் சேர்ந்து நடித்தற்காக ரொம்பவே பெருமைப்பட்டுக் கொண்டார் மல்லிகா. படம்வெளிவந்தபோதுதான் பிட்டு ரோலில் மல்லிகாவை கிளாமராக நடமாட விட்டிருக்கிறார் ஜாக்கி என்பது தெரியவந்து மல்லிகாவைப் பார்த்து எல்லோரும் விஷமப் புன்னகை பூத்தனர்.

ஆனாலும் அதையும் தனது அழகான கிளாமர் பேச்சால் சமாளித்தார் மல்லிகா. இப்போது மல்லிகா படுஜாலியாக, சந்தோஷமாக இருக்கிறார். காரணம் கமலுடன் தசாவதாரத்தில் நடித்ததற்காக. இதுவரை இப்படி ஒருயூனிட்டை நான் பார்த்ததே இல்லை. குறிப்பாக கமல்ஜி என்னை ரொம்பவே கவர்ந்து விட்டார் என்றுஎல்லோரிடம் அங்கலாய்த்துக் கொண்டிருக்கிறாராம் மல்லிகா.

அப்படி என்னதான் செய்து விட்டார் கமல்ஜி என்று மல்லிகாஜியிடம் கேட்டால், அதை ஏன் கேட்கிறீர்கள்.பங்க்சுவாலிட்டியில் கமல்ஜியை மிஞ்ச ஆளே கிடையாது. திட்டமிட்ட நேரத்திற்கு அரை மணி நேரம்முன்பாகவே வந்து விடுகிறார். என்னால் ஒரு நாள் கூட அப்படிப் போக முடியவில்லை.

அதேபோல அன்றைய ஷூட்டிங்கில் என்னென்ன நடக்கப் போகிறது என்பதை முதல் நாளே பக்காவாக கேட்டுக்கொண்டு, ஹோக் ஒர்க் செய்து விட்டுத்தான் ஸ்பாட்டுக்கே வருகிறார்.

நடிப்பில் பிய்த்து உதறுகிறார். எனக்குக் கூட நடிக்கச் சொல்லிக் கொடுத்தாரே! அவரிடம் நிறைய கற்றுக்கொண்டேன் (நிறைய ஹீரோயின்கள் இதை ஏற்கனவே சொல்லியாச்சு!)

கமல்ஜி எனக்கு ஒரு டிவிடியை அன்பளிப்பாக கொடுத்தார். அது ஒரு காமெடிப் படம். கூடஞு ஏணிடூதூ எணூச்டிடூ என்பதுஅதன் பெயர். ரொம்ப ரசித்துப் பார்த்தேன். கமல்ஜி மிகுந்த ரசனை உள்ளவர் (இதையும் நிறைய பேர் பலமுறைசொல்லியாச்சு!)

கமல்ஜியுடன் நடித்ததை எனது வாழ்க்கையில் மறக்கவே முடியாது. அவ்வளவு அருமையான அனுபவம்எனக்குக் கிடைத்தது என்று புல்லரித்துப் பேசுகிறார் மல்லிகா.

சரி, இந்திப் படங்களைப் போல இங்கும் கிளாமரில் பின்னியிருக்கிறீர்களா என்று கேட்டால், என்னைப்பொறுத்தவரை இயக்குநர் சொல்வதை விட கூடுதலாகவே செய்ய விரும்புவேன். அது இந்தியாக இருந்தாலும்சரி, ஆங்கிலமாக இருந்தாலும் சரி, தமிழாக இருந்தாலும் சரி. மொழி பாரபட்சம் கிடையவே கிடையாது.

தசாவதாரத்திலும் கிளாமரில் புகுந்து விளையாடியுள்ளேன். அதை விட எனது கேரக்டர் ரொம்பவே பேசப்படும்.அதனால்தான் படு சந்தோஷமாக நடித்துள்ளேன் என்கிறார் மல்லிகா.

மல்லிகா சொல்லும்போதே படத்தைப் பார்க்க பரபரங்குதே!.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil