மல்லிகா ஷெராவத்தின் நல்ல மனசு!

By Chakra

Mallika Sheravat
பலருக்கும் 'செக்ஸ் பாம்' ஆகத் தெரியும் இந்தி நடிகை மல்லிகா ஷெராவத்தை, கருணை உள்ளம் கொண்டவராகவும் சித்தரிக்கும் ஒரு சம்பவம் இது. ஹாலிவுட்டில் இவரது இந்த கருணை மனதைப் பற்றிதான் பெரிதாகப் பேசுகிறார்களாம்.

விஷயம் இதுதான்:

சில ஆண்டுகளுக்கு முன் 'தி மித்' ஆங்கிலப் படத்தில் ஜாக்கிசானுடன் நடித்த மல்லிகா ஷெராவத், தற்போது 'ஹில்ஸ்...' என்னும் ஆங்கிலப் படத்தில் நடித்து வருகிறார். இப்படம் முடிந்ததும் இவர் இந்தியாவிற்கு வந்துவிட வேண்டும்.

ஆனால் தொடர்ந்து லாஸ் ஏஞ்சல்சில் தங்கி இருக்கப் போகிறாராம் மல்லிகா. காரணம் ஹாலிவுட்டின் பிரபல நடிகை ஷரோன் ஸ்டோனுடன் ஒரு படத்தில் மல்லிகா இணைந்து நடிக்கவிருக்கிறாராம்.

இப்படத்தில் இவருக்கு கிடைக்கும் சம்பளம் முழுவதையும் அனாதை குழந்தைகளுக்கே வழங்கப் போவதாக அறிவித்துள்ளார் மல்லிகா.

சம்பளத்தையே எதிர்பார்க்காமல் மல்லிகா ஷெராவத் நடிக்கும் செய்தி அறிந்து, 'இந்தியர்கள் வித்தியாசமானவர்கள். இப்படிக் கூட ஒரு நடிகை இருப்பாரா?' என்று கேட்டு செய்திகள் வெளியிட்டுள்ளன மீடியாக்கள்.

மல்லிகாவின் சேவை மனப்பான்மையை பாராட்டிய நடிகை ஷாரோன் ஸ்டோன், தான் சொந்தமாக தயாரிக்க உள்ள அடுத்த படத்திலும் மல்லிகாவுக்கே வாய்ப்பு தருவதாக உறுதி கூறியுள்ளாராம்!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X