தேசிய கொடியை அவமதித்தாக புகார். மல்லிகா ஷெராவத்தை கைது செய்ய கோரிக்கை

By Mayura Akilan

மும்பை: மூவர்ணக்கொடியை அணிந்து கவர்ச்சி போஸ் கொடுத்த கவர்ச்சி நடிகை மல்லிகா ஷெராவத்தை கைது செய்யவேண்டும் என்று கோரிக்கை வலுத்துள்ளது.

மல்லிகா ஷெராவத் நடித்த டர்ட்டி பாலிடிக்ஸ் என்ற படத்தின் போஸ்டர் வெளியிடப்பட்டு உள்ளது . அதில் அவர் மூவர்ண கொடியில் உள்ள நிறத்தில் உள்ள ஆடையை ஆபாசமாக அணிந்து போஸ் கொடுத்துள்ளார். இதை தொடர்ந்து அவர் இந்திய தேசிய கொடியை அவமதித்து விட்டார் எனவும் அவரை கைது செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்துள்ளது.

கே.சி.பொகாடியா இயக்கத்தில் தயாராகி உள்ள படம் டர்ட்டி பாலிடிக்ஸ். இந்தப் படத்தில் நஸ்ருதீன் ஷா, ஓம் பூரி,அனுபம் கேர் ஜாக்கி செராப் ஆகியோர் நடித்து உள்ளனர்.

பன்வாரிதேவி கதை

பன்வாரிதேவி கதை

இந்த படத்தின் கதை பன்வாரிதேவியின் நிஜவாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்டு உள்ளது. பன்வாரி தேவி என்ற நர்ஸ் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் ராஜஸ்தான் அரசியல்வாதிகளிடம் தொடர்பு கொண்டு அவர்களுடன் ஆபாசமாக இருப்பது போன்ற வீடியோக்கள் எடுத்து மிரட்டி வந்தவர்.

கவர்ச்சியாக மல்லிகா ஷெராவத்

கவர்ச்சியாக மல்லிகா ஷெராவத்

இந்த கதையை அடிப்படையாக வைத்து தயாரிக்கபட்டுள்ள திரைப்படம்தான் டர்ட்டி பாலிடிக்ஸ். இந்த படத்தின் போஸ்டரில் அரசியல்வாதியின் கார் ஒன்றின் மீது படுகவர்ச்சியாக உட்கார்ந்திருக்கும் மல்லிகா ஷெராவத் ,கையில் சிடி கேசட் ஒன்றை வைத்துள்ளார்.

தேசிய கொடியில் உடை

தேசிய கொடியில் உடை

பின்புறத்தில் ராஜஸ்தான் மாநில சட்டமன்றம் உள்ளது. தேசியகொடியின் நிறத்தில் ஆடையை ஆபாசமாக உடுத்தி உள்ளார். ராஜஸ்தான் சட்டசபையையும் அவர் அசிங்கப்படுத்தியுள்ளதாக புகார் எழுந்துள்ளது.

கைது செய்ய போராட்டம்

கைது செய்ய போராட்டம்

பாரதிய ஜனதா கட்சியினர் மற்றும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பை சேர்ந்தவர்கள் மல்லிகாவை உடனடியாக கைது செய்ய வேண்டும் என போராட்டம் நடத்தி வருகின்றனர்.

சர்ச்சை நாயகி மல்லிகா

சர்ச்சை நாயகி மல்லிகா

மல்லிகா ஷெராவத் அறிமுகமான காயிஷ் என்ற படத்திலேயே 18 முத்தக் காட்சிகளில் நடித்தார். அடுத்து, மர்டர் படத்தில் படுக்கையறை காட்சிகளில் நடித்து பிரபலமானார். தசாவதாரம் படத்தில் கமலுடன் நடித்துள்ளார் மல்லிகா ஷெராவத்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X