தமிழில் மீண்டும் மல்லிகா ஷெராவத்... ஜீவனுடன் ஜோடி சேர, நடிகைக்கு சம்பளம் இவ்ளோ கோடியாம்!
சென்னை: பிரபல ஹாட் நடிகை மல்லிகா ஷெராவத் தமிழில் மீண்டும் நடிக்கிறார். இதற்காக அவர் கோடிகளில் சம்பளம் பெற்றிருக்கிறார்.
காக்க காக்க, திருட்டுப் பயலே, நான் அவனில்லை, மச்சக்காரன், தோட்டா உட்பட சில படங்களில் நடித்தவர் ஜீவன்.
இவர் அடுத்து ஹீரோவாக நடிக்கும் படத்துக்கு, பாம்பாட்டம் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்தப் படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய 5 மொழிகளில் தயாராகிறது.

வி.சி.வடிவுடையான்
மிரட்டும் திகில் படமான இதை, தம்பி வெட்டோத்தி சுந்தரம், சவுகார்பேட்டை, பொட்டு ஆகிய படங்களை இயக்கிய வி.சி.வடிவுடையான் இயக்குகிறார். யுகபாரதி பாடல்களை எழுத, அம்ரீஷ் இசையமைக்கிறார். 6.2, ஓரம்போ, வாத்தியார் ஆகிய படங்களை தயாரித்த வி.பழனிவேல், தயாரிக்கிறார். பண்ணை இளங்கோவன் இணை தயாரிப்பு செய்கிறார்

மல்லிகா ஷெராவத்
கிராபிக்ஸுக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாகும் இந்தப் படத்தில் ஜீவனுக்கு ஜோடியாக நடிக்க ஹீரோயின் தேடி வந்தனர். முன்னணி நடிகைகள் சிலரிடம் பேசி வந்தனர். இப்போது பிரபல இந்தி நடிகை மல்லிகா ஷெராவத் நடிக்கிறார். இவர் தமிழில் ஒஸ்தி படத்தில் ஒரு பாடலுக்கு ஆடியிருந்தார். கமல்ஹாசனின் தசாவதாரம் படத்திலும் நடித்திருந்தார்.

சம்பளம்
இந்தியில் பிசியாக நடித்து வந்த இவர், சில ஆங்கில மற்றும் சீன படங்களிலும் நடித்துள்ளார். இப்போது அதிக வாய்ப்பில்லாமல் இருக்கும் அவருக்கு பாம்பாட்டம் படத்தில் நடிக்க சுமார் 2 கோடி ரூபாய் கொடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்தப் படத்தின் ஷூட்டிங் சென்னை, பெங்களூரு, ஹைதராபாத் மற்றும் தென்னாப்பிரிக்காவில் நடக்க இருக்கிறது.

மாடர்ன் குயின்
இயக்குனர் வடிவுடையான் கூறும்போது, கடந்த வாரம் மும்பையில் நடிகை மல்லிகா ஷெராவத்தைச் சந்தித்து கதை சொன்னோம். கேட்டதுமே நடிக்க சம்மதித்தார். 'நல்ல ஸ்கிரிப்ட் கிடைக்காததால் நீண்ட நாட்களாக நடிக்கவில்லை. இந்த ஸ்கிரிப்ட் பிடித்திருப்பதால் நடிக்கிறேன்' என்றார். நவீன கால குயினாக அவர் நடிக்கிறார். படம் முழுவதும் வரும் கேரக்டர்' என்றார்.

இந்தி ஹீரோ
இந்தப் படத்துக்காக அவரது லுக்கை வித்தியாசமாக மாற்ற உள்ளனர். படத்தில் அவருக்கு ஆக்ஷன் காட்சிகளும் இருக்கின்றன. இந்த மாத இறுதியில் மல்லிகா ஷெராவத் நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட இருக்கின்றன. சென்னையில் ஷூட்டிங் நடக்கிறது. இந்தப் படத்தில் இந்தி ஹீரோ ஒருவர் வில்லனாக நடிக்க இருக்கிறாராம்.


Click it and Unblock the Notifications











