லாக்டவுனில் ஜாலியா கேட் வாக்.. மல்லிகா ஷெராவத்தின் வைரல் வீடியோ!
மும்பை : ஊரடங்கிலும் வீட்டில் இருக்க முடியாமல் அருகில் இருக்கும் பூங்காவிற்கு வாக்கிங் சென்ற மல்லிகா ஷெராவத் .
தற்போது கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக உலக நாடுகள் பலவற்றில் நோய்வாய்ப்பட்டு இருக்கின்றனர் அதுமட்டுமல்லாமல் பல மேலைநாடுகளில் உயிரிழப்புகளும் அதிகமாக இருக்கிறது. இதன் காரணமாக உலகில் உள்ள பல நாடுகளில் முழுமையான ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் லாக் டவுன் காரணமாக பல வணிகங்கள் மூடப்பட்டு இருக்கின்றன.

அத்தியாவசிய பொருட்கள் தவிர வேறு எதுவும் பல நாடுகளில் கிடைப்பது இல்லை. அதுவும் முக்கியமாக இந்தியாவில் மே 17ஆம் தேதி வரை லாக் டவுன் நீட்டிக்கப்பட்டு உள்ளது. இதனால் அத்தியாவசிய தேவைகள் தவிர வேறு எதற்காகவும் மக்கள் வெளியே வரக்கூடாது என்று அரசாங்கம் கூறியுள்ளது.
கிட்டத்தட்ட 45 நாட்களுக்கு மேல் மக்கள் இந்த ஊரடங்கில் வீடுகளுக்கு உள்ளேயே முடங்கிக் கிடக்கின்றனர். சாதாரண மக்கள் மட்டுமல்லாமல் அனைவருமே அவரவர் வீட்டுக்குள் இருந்து வருகின்றனர். இது ஒரு அளவுக்கு மேல் சலிப்பை உண்டாக்கி மக்கள் மிகவும் மோசமான மன அழுத்தத்திற்கு ஆளாக்கப்படுகின்றனர்.
இந்தக் கொரோனா காரணமாக உலகமே ஸ்தம்பித்து இருக்கிறது யார் யார் உயிருடன் இருக்கப்போகிறோம் என்பது யாருக்கும் தெரியாது. இந்த வைரஸை அழிக்கும் மருந்தினை கண்டுபிடிக்கும் வரை நம் வீட்டுக்குள்ளேயே தான் இருக்கவேண்டும்.

அதாவது வீட்டை விட்டு வெளியே வருவது கூட ஒரு கட்டத்தில் நம் வாழ்க்கையிலேயே பெரிய மகிழ்ச்சியான தருணமாக மாறக்கூடும் என்பதை சொல்லும் வகையில் மல்லிகா ஷெராவத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தான் ஒரு பூங்காவில் நடந்து செல்லும் காணொளியை பதிவிட்டு இருக்கிறார்.

அதற்கு கீழே அவர் குறிப்பிட்டிருப்பது யாதெனில் ஒரு சாதாரண பூங்காவில் நடந்து செல்வது கூட இவ்வளவு பெரிய சந்தோசத்தை தரும் என்பது நம்மில் பலருக்கு தெரியாமல் இருந்தது இதனை உணர வைத்திருப்பது இந்த லாக் டவுன். இதன் காரணமாக நம் வாழ்வில் நடக்கும் சின்ன சின்ன நல்ல விஷயங்களைக் கூட சந்தோஷத்துடன் அனுபவிக்கக்கூடிய மனநிலையை பெற்றிருப்பதாக அவர் குறிப்பிட்டு இருக்கிறார்.

அவர் கூறியிருப்பது மிகவும் உண்மைதானே. எவ்வளவு பணமும் புகழும் வசதி வாய்ப்புகளும் இருந்தாலும் இவை அனைத்தையும் வைத்துக்கொண்டு வீட்டுக்குள்ளேயே இருப்பதென்பது மிகுந்த வசதி வாய்ப்புகள் பொருத்தப்பட்ட இன்னொரு சிறைச்சாலை போலவே இருக்கும் என்பது போல மல்லிகாவின் ரசிகர்கள் பலர் ஆமாம் நீங்கள் சொல்வது உண்மைதான் என்பது போல கூறியுள்ளனர்.

எனவே இந்த வைரஸ் இடம் மல்லிகா தான் கற்ற பாடத்தை தனது இன்ஸ்டாகிராம் காணொளியின் மூலம் தன்னுடைய ரசிகர்களுக்கும் பிற மக்களுக்கும் எடுத்துரைத்திருக்கிறார். அவர் பதிவிட்ட இந்த வீடியோவை பலரும் பகிர்ந்து வருகின்றனர் .


Click it and Unblock the Notifications











