»   »  "ஆட்டோகிராப்" மல்லிகா எஸ்.எஸ்.எல்.சி. பாஸ்!

"ஆட்டோகிராப்" மல்லிகா எஸ்.எஸ்.எல்.சி. பாஸ்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஆட்டோகிராப் மற்றும் திருப்பாச்சியில் நடித்த மல்லிகா, கேரள மாநிலத்தில் நடந்த பத்தாவது வகுப்புத் தேர்வில் தேர்ச்சிபெற்றுள்ளார்.

ஆட்டோகிராப் படத்தில் சேரனின் பள்ளித் தோழியாகவும், காதலியாகவும் நடித்து பின்னர் விஜய்யின் தங்கச்சியாக திருப்பாச்சிபடத்தில் நடித்த மல்லிகா, கேரளாவைச் சேர்ந்தவர். திருச்சூர் ஹோலி செவலஸ் என்ற பள்ளியில் பத்தாவது படித்துக் கொண்டேநடித்து வந்த மல்லிகா சமீபத்தில்பொதுத் தேர்வை எழுதியிருந்தார்.

இந்த தேர்வு முடிவுகள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் மல்லிகா தேர்ச்சி பெற்றுள்ளாராம். சினிமாவில் நடித்தபடியே,தேர்வுகளையும் சிறப்பாக எழுதியிருந்தேன். இப்போது பாஸ் ஆகி விட்டேன் என்று மகிழ்ச்சி தெரிவித்துள்ளார் மல்லிகா.

சமீபத்தில் நடிகை பிரணதி, பிளஸ் டூ தேர்வில் பாஸ் ஆகியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இன்னொரு நடிகையான "காதல்"நாயகி சந்தியாவும், தனித் தேர்வராக வருகிற செப்டம்பர் மாதம் பத்தாவது வகுப்புத் தேர்வு எழுதவுள்ளார் என்பதுகுறிப்பிடத்தக்கது.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil