இதோ இன்னொரு மல்லி! கேரளாவிலிருந்து ஆட்டோகிராப் மூலமாக தமிழ் சினிமாவுக்கு வந்த மல்லிகா, குட்டி குட்டி ரோல்களில் கலக்கிக்கொண்டிருக்கிறார். இப்போது இன்னொரு மல்லிகா, கேரளா மூலமாக மும்பையிலிருந்து கோலிவுட்டில் லேண்ட் ஆகியுள்ளார்.சேரன் தயாரிப்பில் கேமரா மேன் விஜய் மில்டனின் இயக்கத்தில் உருவாகும் படம் அழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறது.இதில் தான் நாயகியாக நடிக்கிறார் மல்லிகா கபூர். அவருக்கு இது தான் முதல் தமிழ்ப் படம் என்றாலும் இதற்கு முன்பு ஒரு மலையாளப் படத்தில் நடித்துள்ளார். அற்புதத் தீவு எனபெயரிடப்பட்டுள்ள அந்தப் படத்தில் இவருக்கு ஜோடியாக நடித்தவர் கனா கண்டேனில் நெகட்டிவ் கேரக்டரில் நடித்தபிருத்விராஜ்.மும்பையில் மாடலிங்கில் அவர் பாட்டுக்குப் பிசியாக இருந்த மல்லிகாவை இயக்குனர் வினயன் தான் தனது அற்புத தீவு மூலம்சினிமாவுக்கு இழுத்து வந்தார். இந்தப் படத்தில் மல்லிகா நடித்துக் கொண்டிருந்த போது தான் அழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறது படத்திற்கான நாயகிவேட்டையில் சேரனும், விஜய் மில்டனும் படு பிசியாக இருந்தார்கள். எதேச்சையாக மல்லிகா கபூரின் புகைப்படம் மில்டன் கண்ணில் பட, அவரைப் பற்றி சேரன் விசாரித்துள்ளார்.மலையாளப் படத்தில் அம்மணி நடித்துக் கொண்டிருப்பதாக தகவல் கிடைத்தவுடன் சேரன், வினயனுடன் பேசியுள்ளார். அவர்மல்லிகாவை பயன்படுத்திக் கொள்ள பச்சைக் கொடி காட்டியவுடன் பார்ட்டியை புக் செய்து கோலிவுட்டுக்கு கொண்டு வந்துவிட்டார்கள்.மல்லிகா கபூரிடம் ஒரு நல்ல விஷயம் இருக்கிறது. தமிழ் படத்தில் நடிக்கப் போகிறோம் என்று தெரிந்தவுடன் உடனடியாக ஒருதமிழாசிரியையை வைத்து தமிழைக் கற்று வருகிறார். உச்சரிப்புக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து தீவிரமாக கற்றுவருகிறாராம். ஷூட்டிங் ஸ்பாட்டிலும் தமிழிலேயே பேச முயற்சிக்கிறாராம். (பாமக கட்சியினர் கேள்விப்பட்டால் ரொம்பவும்சந்தோஷப்படுவார்கள்).படம் முடிவதற்குள் மல்லிகா, மதுரைத் தமிழில் பேசினாலும் ஆச்சரியமில்லை என்கிறார்கள் யூனிட்டார். ஒரு மேட்டர் மறந்துபோச்சு, மல்லிகாவுக்கு ஜோடியாக (?) இப்படத்தில் நடிப்பவர் நம்ம பரத்!வாழ்க தமிழ், வளர்க மல்லிகா கபூர்!

By Staff

கேரளாவிலிருந்து ஆட்டோகிராப் மூலமாக தமிழ் சினிமாவுக்கு வந்த மல்லிகா, குட்டி குட்டி ரோல்களில் கலக்கிக்கொண்டிருக்கிறார். இப்போது இன்னொரு மல்லிகா, கேரளா மூலமாக மும்பையிலிருந்து கோலிவுட்டில் லேண்ட் ஆகியுள்ளார்.

சேரன் தயாரிப்பில் கேமரா மேன் விஜய் மில்டனின் இயக்கத்தில் உருவாகும் படம் அழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறது.இதில் தான் நாயகியாக நடிக்கிறார் மல்லிகா கபூர்.

அவருக்கு இது தான் முதல் தமிழ்ப் படம் என்றாலும் இதற்கு முன்பு ஒரு மலையாளப் படத்தில் நடித்துள்ளார். அற்புதத் தீவு எனபெயரிடப்பட்டுள்ள அந்தப் படத்தில் இவருக்கு ஜோடியாக நடித்தவர் கனா கண்டேனில் நெகட்டிவ் கேரக்டரில் நடித்தபிருத்விராஜ்.


மும்பையில் மாடலிங்கில் அவர் பாட்டுக்குப் பிசியாக இருந்த மல்லிகாவை இயக்குனர் வினயன் தான் தனது அற்புத தீவு மூலம்சினிமாவுக்கு இழுத்து வந்தார்.

இந்தப் படத்தில் மல்லிகா நடித்துக் கொண்டிருந்த போது தான் அழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறது படத்திற்கான நாயகிவேட்டையில் சேரனும், விஜய் மில்டனும் படு பிசியாக இருந்தார்கள்.

எதேச்சையாக மல்லிகா கபூரின் புகைப்படம் மில்டன் கண்ணில் பட, அவரைப் பற்றி சேரன் விசாரித்துள்ளார்.

மலையாளப் படத்தில் அம்மணி நடித்துக் கொண்டிருப்பதாக தகவல் கிடைத்தவுடன் சேரன், வினயனுடன் பேசியுள்ளார். அவர்மல்லிகாவை பயன்படுத்திக் கொள்ள பச்சைக் கொடி காட்டியவுடன் பார்ட்டியை புக் செய்து கோலிவுட்டுக்கு கொண்டு வந்துவிட்டார்கள்.


மல்லிகா கபூரிடம் ஒரு நல்ல விஷயம் இருக்கிறது. தமிழ் படத்தில் நடிக்கப் போகிறோம் என்று தெரிந்தவுடன் உடனடியாக ஒருதமிழாசிரியையை வைத்து தமிழைக் கற்று வருகிறார். உச்சரிப்புக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து தீவிரமாக கற்றுவருகிறாராம்.

ஷூட்டிங் ஸ்பாட்டிலும் தமிழிலேயே பேச முயற்சிக்கிறாராம். (பாமக கட்சியினர் கேள்விப்பட்டால் ரொம்பவும்சந்தோஷப்படுவார்கள்).

படம் முடிவதற்குள் மல்லிகா, மதுரைத் தமிழில் பேசினாலும் ஆச்சரியமில்லை என்கிறார்கள் யூனிட்டார். ஒரு மேட்டர் மறந்துபோச்சு, மல்லிகாவுக்கு ஜோடியாக (?) இப்படத்தில் நடிப்பவர் நம்ம பரத்!

வாழ்க தமிழ், வளர்க மல்லிகா கபூர்!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X