த்ரிஷா படத்தில் இந்த நடிகையும் இருக்காராமே... இதுல யார் ஹீரோயின்? அவரா... இவரா?
சென்னை: மோகன்லால் ஜோடியாக, த்ரிஷா நடிக்கும் படத்தில் மற்றொரு ஹீரோயினும் நடிக்கிறார்.
பிரபல இயக்குனர் ஜீத்து ஜோசப், மலையாளத்தில் இயக்கிய த்ரிஷியம் படம் 2013 ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட்டானது. இந்தி, தமிழ் உட்பட பல்வேறு மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது.
இந்த படத்தின் தமிழ் ரீமேக்கான பாபநாசம் படத்தை, கமல்ஹாசன் நடிப்பில் ஜீத்து ஜோசப்பே இயக்கினார்.

ஜீத்து ஜோசப்
இது தமிழிலும் ஹிட்டானது. இதையடுத்து மலையாளத்தில் சில படங்களை இயக்கிய ஜீத்து ஜோசப், தமிழில் தம்பி படத்தை இயக்கினார். இதில் கார்த்தி, ஜோதிகா, சத்யராஜ், நிகிலா விமல் உட்பட பலர் நடித்திருந்தனர். இந்தப் படமும் வரவேற்பை பெற்றது.

மோகன்லால்
இதற்கிடையே அவர் மோகன்லால் நடிப்பில் மீண்டும் படம் இயக்குகிறார். ஆக்ஷன் த்ரில்லர் கதையை கொண்ட படமான இதற்கு, ராம் என்று டைட்டில் வைத்துள்ளனர். இதன் ஷூட்டிங் வெளிநாடுகளிலும் நடக்க இருக்கிறது.

த்ரிஷா
இதில் மோகன்லால் மனைவியாக, த்ரிஷா நடிக்கிறார். அபிஷேக் பிலிம்ஸ் படத்தைத் தயாரிக்கிறது. இதில் இன்னொரு ஹீரோயினும் இப்போது சேர்ந்துள்ளார்.

பிராச்சி தெஹ்லான்
மம்மூட்டியின் மாமாங்கம் படத்தில் நடித்த பிராச்சி தெஹ்லான்தான் அவர். இவர் வலைப்பந்து மற்றும் பேஸ்கட்பால் வீராங்கனையும் கூட. இந்திய வலைப்பந்தாட்ட (netball)அணியின் முன்னாள் கேப்டன் என்பது குறிப்பிடத்தக்கது.

சாய்குமார்
இந்தப் படத்தில் இந்திரஜித், அடில் ஹூசைன், சாய்குமார், சித்திக் உட்பட பலர் நடிக்கின்றனர். படத்தை ஓணம் பண்டிக்கைக்கு ரிலீஸ் செய்ய முடிவு செய்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











