»   »  மம்தா பாய்ச்சல்!

மம்தா பாய்ச்சல்!

Subscribe to Oneindia Tamil

அரண் படத்தில் தனக்குப் பதில் நடிகர் ராஜீவை டப்பிங் பேச வைத்து விட்டனர் என்றுஅந்தப் படத்தில் நடித்துள்ள மோகன்லால் குமுறியுள்ள நிலையில், இப்போதுமலையாள நடிகை மம்தா மோகன்தாசும், படத்தின் இயக்குனர் மேஜர் ரவி மீதுபாய்ந்துள்ளார்.

ஆர்.பி.செளத்ரியின் தயாரிப்பில், மேஜர் ரவியின் இயக்கத்தில் உருவாகியுள்ள படம்அரண். இந்தப் படம் கீர்த்தி சக்ரா என்ற பெயரில் மலையாளத்திலும்வெளியாகியுள்ளது.

இரு மொழிகளிலும் இந்தப் படம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருகிறது.

இந் நிலையில், அரண் படத்தில் தனக்குப் பதில் நடிகர் ராஜீவை வைத்து டப்பிங் பேசிவிட்டதாக குற்றம் சாட்டினார் மோகன்லால்.

இப்போது நடிகை மம்தா மோகன்தாஸும் புதிய புகாரை கூறியுள்ளார்.

முதலில் இந்தப் படத்துக்கு என்னைத் தான் புக் செய்தனர். ஆனால் திடீரென என்னைநீக்கிவிட்டு கோபிகாவை ஹீரோயினாகப் போட்டு படத்தையும் முடித்து வெளியிட்டுவிட்டனர் என்று புலம்புகிறார் மம்தா.

ஆனால் இயக்குனர் தரப்பு இதை மறுக்கிறது. முதலில் மம்தாவை ஒப்பந்தம்செய்தோம், இல்லை என்று சொல்லவில்லை. ஆனால் கதாபாத்திரதிற்கு மம்தாபொருத்தமாக இல்லை (அது என்ன பொறுத்தம் பார்த்தார்களோ?) என்று தெரிந்ததால்அவரை தூக்கி விட்டு கோபிகாவை போட்டோம்.

படம் இப்போது நன்றாக ஓடிக் கொண்டிருகிகறது. இதனால்தான் இத்தனை நாட்கள்சும்மா இருந்துவிட்டு இபபோது பிரச்சினை பண்ண பார்க்கிறார் மம்தா என்றுகூறுகிறது ரவி தரப்பு.

மம்தா மோகன்தாஸ், மலையாளத்தில் அறிமுகமான முதல் படத்திலேயே கிளாமரில்கிறங்கடித்தார். இப்போது தமிழில் சிவப்பதிகாரம் என்ற படத்தில் விஷாலுக்குஜோடியாக நடித்து வருகிறார்.

Read more about: mamtha attacks aran director
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil