தனுஷை பார்த்ததுமே.. அப்படியே மறந்து நின்னுட்டேன்.. என்னங்க மமிதா பைஜு இப்படி ஓபனா சொல்லிட்டாங்க!
சென்னை: ஜி.வி. பிரகாஷின் ரிபெல் படத்தின் மூலம் தமிழில் அறிமுகம் ஆனாலும், டியூட் படத்திற்கு பிறகே கோலிவுட் ரசிகர்களின் க்யூட் டாலாக மாறியுள்ளார் நடிகை மமிதா பைஜு. விஜய்யின் ஜனநாயகன் திரைப்படம் வந்திருந்தால் இந்நேரம் அவர் வேறலெவலில் ரசிகர்கள் மத்தியில் டிரெண்டாகி இருப்பார்.
பிரதீப் ரங்கநாதனை தொடர்ந்து தனுஷ், சூர்யா, விஷ்ணு விஷால் என வரிசையாக டாப் நடிகர்களுடன் மமிதா பைஜு தமிழில் பல படங்களில் நடித்து வருகிறார். அதிலும், தனுஷ் உடன் அவர் இணைந்து நடித்துள்ள 'கர' திரைப்படம் விரைவில் திரைக்கு வருகிறது.

இந்நிலையில், தனுஷ் சாரை பார்த்து தான் முதன் முதலாக ஸ்டன்னாகி போனேன் என மமிதா பைஜு சமீபத்தில் பேசியது வைரலாகி வருகிறது.
தனுஷுக்கு செம கிரேஸ்: கோலிவுட் முதல் ஹாலிவுட் வரை நடிகர் தனுஷ் நடித்து விட்டார். பாலிவுட்டில் தொடர்ந்து 100 கோடி படங்களை கொடுத்த ஒரே கோலிவுட் நடிகராகவும் தனுஷ் தான் வலம் வருகிறார். நடிகைகள் மற்றும் சினிமா பிரபலங்கள் மத்தியில் தனுஷின் உழைப்புக்கு மிகப்பெரிய அளவில் கிரேஸ் உள்ளது. நடிப்பு, இயக்கம், தயாரிப்பு, பாடல்களை எழுதுவது, பாடுவது, நடனமாடுவது என தனது பன்முகத்தன்மையையும் அவர் தொடர்ந்து நிரூபித்து வருகிறார்.
தனுஷை பார்த்து டயலாக் மறந்தேன்: கடந்த ஆண்டு தீபாவளிக்கு கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்த டியூட் படத்தில் ஹீரோயினாக நடித்து ஒட்டுமொத்த கோலிவுட் ரசிகர்களையும் கவர்ந்த மமிதா பைஜு அடுத்ததாக போர் தொழில் இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் 'கர' படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார். விஜய், சூர்யா உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ள மமிதா பைஜு, இதுவரை தான் எப்போதுமே எந்த நடிகருடன் நடித்தாலும் தனது வசனங்களை மறந்ததே இல்லை என்றும் 'கர' படத்தில் தனுஷ் உடன் நடிக்கும் போது குறிப்பாக ஒரு சீனில் அவரது நடிப்பை பார்த்து என்னோட டயலாக்கையே மறந்து நின்றேன் என மமிதா பைஜு பேசியது தற்போது திரையுலகில் வைரலாகி வருகிறது.

சூர்யாவின் ஸ்பெஷல் காபி: நடிகர் சூர்யா சாருக்கு மட்டும் ஸ்பெஷல் காபி வரும். அது என்னோட ஃபேவரைட் ஒன்றாகவே மாறிவிட்டது என்றும் மமிதா பைஜு கூறியுள்ளார். வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் சூர்யா 46 படத்திலும் இவர்தான் ஜோடி. சூர்யாவின் அசிஸ்டண்ட் இடம் கேட்டேன், எங்கே இருந்து இந்த காபி தூள் வருதுன்னு, அவர் எதுவுமே சொல்லவில்லை. டைரக்டா சூர்யா சார் கிட்டயே கேட்டுவிட்டேன். அன்று முதல் படப்பிடிப்பு முடியும் வரை எனக்கும் அதே ஸ்பெஷல் காபி கிடைக்கும்படி சூர்யா சார் ஏற்பாடு செய்துக் கொடுத்தார் என்றும் மமிதா பைஜு கூறியுள்ளார். இந்த ஆண்டு கோலிவுட் ரசிகர்களின் கனவுக்கன்னியாகவே மமிதா பைஜு மாறிவிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











