அய்யோ தளபதியை பார்த்துட்டேன்.. மஞ்சள் சுடிதாரில் மமிதா பைஜு செம ஹேப்பி.. பூஜா ஹெக்டே ஜாக்கெட் செம!
சென்னை: தளபதி 69 படத்தின் பூஜை இன்று நடைபெற்ற நிலையில், 4வது செட் போட்டோக்களையும் கேவிஎன் தயாரிப்பு நிறுவனம் ரசிகர்கள் கேட்காமல் கொடுத்துக் கொண்டே இருக்கின்றனர். நீங்க கேட்கிறது எங்களுக்கு புரிகிறது ஒவ்வொன்றாக வந்துக் கொண்டே இருக்கும் என உறுதியளித்துள்ளனர்.
தளபதி 69 படம் குறித்த அப்டேட்டை எந்த தடையுமின்றி அஜித் ரசிகர்கள் விடாமுயற்சி படத்தின் ரிலீஸ் உள்ளிட்ட பல்வேறு அப்டேட்களை கேட்டு காத்துக் கொண்டிருப்பது போல நோகடிக்காமல் அனைத்து அப்டேட்களையும் சரியான நேரத்தில் கேவிஎன் நிறுவனம் கொடுக்கும் என தெளிவாக தெரிகிறது.

லேட்டஸ்ட்டாக வெளியிட்டுள்ள பூஜை புகைப்படங்களின் பூஜா ஹெக்டேவின் நூடுல்ஸ் ஸ்ட்ராப் ஜாக்கெட் மற்றும் மஞ்சள் சுடிதாரில் செம க்யூட்டாக வந்த மமிதா பைஜுவும் ரசிகர்களை வெகுவாக கவர்கின்றனர்.
தளபதியை பார்த்துட்டேன்: வாரிசு படத்தின் பட பூஜையின் போது ராஷ்மிகா மந்தனா விஜய்யை பார்த்து கொடுத்த ரியாக்ஷன்களை ரசிகர்கள் அவ்வளவு எளிதில் மறந்து விட மாட்டார்கள். அதன் பின்னர் ஃபேன் கேர்ள் மொமண்டாக தற்போது நடிகை மமிதா பைஜு நான் தளபதியை பார்த்துட்டேன் என்பது போல அவர் அருகே கை கொடுத்தும் தோளில் சாய்ந்துக் கொண்டும் கொடுத்துள்ள போஸ் வேறலெவலில் ரசிகர்களை ஈர்த்துள்ளன.
மமிதா கனவு நனவாகிடுச்சு: சூர்யாவின் வணங்கான் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாக நினைத்துக் கொண்டிருந்த பிரேமலு நடிகைக்கு அந்த படத்தில் இருந்து சூர்யா விலகியதும் இவரும் விலகும் சூழல் உருவானது. பாலா இவரை அடித்து விட்டார் என பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தளபதி கூட எல்லாம் இனிமேல் படமே பண்ண முடியாது, அவரே சினிமாவை விட்டு போறாரு என பேசிக் கொண்டிருந்த பிரேமலு ஹீரோயினுக்கு அதிர்ஷ்டவசமாக தளபதி 69 படத்திலேயே நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

நூடுல்ஸ் ஸ்ட்ராப் ஜாக்கெட்டில் பூஜா ஹெக்டே: ஹலமிதி ஹபிபோ என ஜானி மாஸ்டரின் நடன அசைவுகளுக்கு தளபதி விஜய்யுடன் ஆட்டம் போட்ட புட்ட பொம்மா பூஜா ஹெக்டே பீஸ்ட் படத்தைத் தொடர்ந்து தற்போது மீண்டும் தளபதி விஜய்யுடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பு கிடைத்ததும் செம ஹேப்பியாகி உள்ளார். சில்வர் கலர் சேலையை அணிந்து வந்த பூஜா ஹெக்டே நூடுல்ஸ் ஸ்ட்ராப் ஜாக்கெட் அணிந்து கண்கொள்ளா காட்சியாக தளபதி 69 பூஜை அன்றே ரசிகர்களுக்கு கவர்ச்சி தரிசனம் கொடுத்து கொல மாஸ் செய்து விட்டார்.
மாலையும் கழுத்துமாக: விஜய் அருகே மாலையும் கழுத்துமாக பூஜா ஹெக்டே நிற்கும் போட்டோ வெளியான நிலையில், கடைசியாக நிற்கும் பாபி தியோலை கிராப் செய்து விட்டு விஜய் மற்றும் பூஜா ஹெக்டே ரசிகர்கள் மாலையும் கழுத்துமாக இருக்கும் புது ஜோடியின் போட்டோக்களை அதிகளவில் ஷேர் செய்து வருகின்றனர்.

சூர்யா 44 படம்: கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா 44 படத்தில் நடித்து வரும் பூஜா ஹெக்டேவுக்கு தமிழ் சினிமாவில் பேக் டு பேக் பெரிய படங்கள் கிடைத்து வருகின்றன. மிஷ்கின் இயக்கத்தில் ஜீவா நடிப்பில் வெளியான முகமூடி படத்தில் அறிமுகமான பூஜா ஹெக்டேவுக்கு இதுவரை கோலிவுட்டில் ஒரு வெற்றிக்கூட கிடைக்காத நிலையில், சூர்யா 44 மற்றும் தளபதி 69 படங்கள் வெற்றிப் படங்களாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.



Click it and Unblock the Notifications











