ஜனநாயகன் லீக்.. சென்சேஷனல் மமிதா இன்னமும் ஃபீல் செய்றாங்க.. உண்மையில் பாவம்தான்

சென்னை: ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் ஜனநாயகன் திரைப்படம் சில வாரங்களுக்கு முன்பு இணையத்தில் லீக்காகி பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதில் ஃப்ரீலான்ஸ் எடிட்டர் உள்பட ஏழு பேர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். இந்த சமபவத்தால் அந்தப் படக்குழுவினரே இடிந்து போய் இருக்கிறார்கள். இந்நிலையில் படத்தில் முக்கியமான ரோலை ஏற்றிருக்கும் மமித பைஜூ சமீபத்திய பேட்டியில் இந்த விஷயம் குறித்து ஃபீல் செய்து பேசியிருக்கிறார்.

விஜய்யின் கடைசி படம் என்று அறிவிக்கப்பட்டு விளம்பரப்படுத்தப்பட்டது ஜனநாயகன். எனவே அவரது ரசிகர்கள் பண்டிகை போல் கொண்டாடுவதற்கு தயாராக இருந்தார்கள். அப்படிப்பட்ட நிலைமையில் படத்துக்கு சென்சார் சான்றிதழ் கொடுக்க அதிகாரிகள் மறுத்துவிட; நீதிமன்றத்துக்கு சென்றது கேவிஎன் நிறுவனம். ஆனால் அங்கே எதுவும் நல்லபடியாக நடக்காததால் வழக்கை வாபஸ் பெற்றுவிட்டு மறுதணிக்கைக்கு அனுப்பியது. அப்போதும் படத்தை பார்க்காமல் இழுத்தடித்தார்கள் அதிகாரிகள்.

Mamitha Baiju Reacts to Jananayagan Leak Very Painful and Disappointing
Photo Credit:

லீக்கான படம்: அவர்கள் விரைவில் படத்தை பார்த்துவிடுவார்கள்; மே 4ஆம் தேதி ரிசல்ட்டுக்கு பிறகு படமானது ரிலீஸாகிவிடும் என எல்லோரும் எதிர்பார்த்தார்கள். ஆனால் யாருமே நினைத்து பார்க்காத வகையில் சில வாரங்களுக்கு முன்பு ஜனநாயகன் திரைப்படம் ஆன்லைனில் லீக் ஆகிவிட்டது. அது மிகப்பெரிய பரபரப்பை பற்ற வைத்தது. இப்படி ஒரு செயலை செய்தவர்களை பார்த்து இன்னமும் சிலர் அதிர்ச்சியில்தான் இருக்கிறார்கள். இதன் காரணமாக பட தயாரிப்பாளருக்கு பல நூறு கோடி ரூபாய் நஷ்டம் ஆகிவிட்டது.

Also Read
விஜய்யை பற்றி அவர் பிள்ளைகள் வந்து சொன்னார்களா?.. சங்கீதா விவகாரத்தில் பிரபல ஜோதிடர் ஓபன் டாக்
விஜய்யை பற்றி அவர் பிள்ளைகள் வந்து சொன்னார்களா?.. சங்கீதா விவகாரத்தில் பிரபல ஜோதிடர் ஓபன் டாக்

எஸ்.ஏ.சி சொன்னது: இந்த விஷயத்தில் படக்குழுவுக்கு ஆதரவாக ஒட்டுமொத்த திரைத்துறையும் நின்றது. ஃப்ரீலான்ஸ் எடிட்டர் உள்பட ஏழு பேர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். முதலில் இந்தப் படத்தின் எடிட்டர் மீது சிலர் சந்தேகப்பட்டார்கள். மேலும் விஜய் மீது சிலருக்கு சந்தேகம் எழுந்தது. அவரது எஸ்.ஏ.சந்திரசேகர்கூட சமீபத்தில் கொடுத்த ஒரு பேட்டியில், "ஜனநாயகன் திரைப்படத்துக்கு விஜய் கையெழுத்து போடும்போது என்ன சொன்னார் என்பதை அவரே ஆடியோ லான்ச்சில் சொல்லியிருப்பார்.

பிரச்னைகள் வரும் என்று தெரிந்துதான் இந்தப் படத்தை ரிலீஸ் செய்ய முடியாது என சொல்லியிருக்கிறார். அது எங்களுக்கு பெரிய ஷாக்கோ, அதிர்ச்சியோ இல்லை. ஒருவரை மன ரீதியாக அடிக்கலாம். அடுத்ததாக பொருளாதார ரீதியாக அடிக்கலாம். ஜனநாயகன் லீக்கானதற்கு எதிர்க்கட்சியினர்தான் காரணம் என்பது எல்லோருக்கும் இயல்பாக வரக்கூடிய சந்தேகம்தான். எனக்கும் அந்த சந்தேகம்தான். படம் ரிலீஸாகியிருந்தால்தான் அதிர்ச்சியாகியிருப்போம்" என்று குறிப்பிட்டிருந்தார்.

மமிதா பைஜு பேட்டி: இந்நிலையில் படத்தில் நடித்திருக்கும் மமிதா பைஜு சமீபத்தில் தனியார் யூடியூப் சேனலுக்கு பேட்டி கொடுத்தார். அந்தப் பேட்டியில் அவர், "இது ரொம்பவே ஏமாற்றமளிக்கும் விஷயம் ஆகும். மிகவும் வேதனையும் அளித்திருக்கிறது. பலரது கனவுகளும், உழைப்பும் இதனால் வீணாகிவிடக்கூடாது. ஆரம்பத்தில் நான் இதை நம்பவே இல்லை. சோஷியல் மீடியாவில் வருவது எல்லாம் உண்மை இல்லை; அப்படி இருக்கவே கூடாது என்றுதான் நினைத்தேன். ஆனால் உண்மை தெரியவந்தபோது எனது சகோதரர்தான் கூறுகிறார். இது ரொம்பவே கெடுவாய்ப்பாகும்" என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X