மம்தாவுக்குப் புதுப் படம்
மலையாளத்து மம்தா மோகன்தாஸுக்கு தமிழில் புதிய படம் ஒன்று கிடைத்துள்ளது.
மலையாளத்து மம்தா அங்கு லங்கா படம் மூலம் விஸ்வரூபம் எடுத்தவர். முதல் படத்திலேயே கிளாமரில் கலக்கிய மம்தா, மலையாளத்திலேயே பிரமாண்ட கவர்ச்சி காட்டி நடித்த முதல் நடிகை என்ற பெயரையும் பெற்றார்.அதன் பின்னர் தமிழுக்கு வந்த மம்தா, சிவப்பதிகாரம் படத்தில் நடித்தார். இப்படம் அவருக்கு தமிழில் சிறப்பான அறிமுகத்தைக் கொடுக்கவில்லை. இதனால் மறுபடியும் மலையாளத்துக்கே திரும்பிய மம்தா, தெலுங்கிலும் கவனம் செலுத்தி வந்தார்.
இந்த நிலையில் மீண்டும் ஒரு தமிழ்ப் படம் மம்தாவுக்குக் கிடைத்துள்ளது. அர்ஜூனுடன் இணைந்து அறுவடை படத்தில் நடிக்கிறார் மம்தா. அறுவடை மலையாளத்திலும், தமிழிலிலும் ஒரே நேரத்தில் உருவாகிறது.
பங்கஜ் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் ஹென்றி தயாரிக்கும் இப்படத்தில் முதல் ஜோடியாக மம்முட்டியும், சினேகாவும் நடிக்கிறார்கள். இரண்டாவது ஜோடியாக அர்ஜூன், மம்தா திறமை காட்டவுள்ளனர்.
சிவப்பதிகாரம் படத்தைத் தொடர்ந்து தமிழில் தனக்கு அதிக படங்கள் வரும் என்ற நம்பிக்கையில் சென்னையிலேயே சில காலம் தங்கியிருந்தார் மம்தா. ஆனால் படம் வரவில்லை, மாறாக ஹோட்டலுக்குக் கட்டாத பில்தான் அவரிடம் வந்தது. அதைக் கூட்ட கட்ட முடியாமல் தவித்தார் மம்தா.
ஒரு வழியாக பில்லை செட்டில் பண்ணி விட்டு அடுத்த வண்டியைப் பிடித்து கேரளாவுக்கேத் திரும்பி விட்டார் மம்தா.
மலையாளத்தில் தற்போது 2 படங்களில் நடித்து வருகிறார் மம்தா. அதேபோல தெலுங்கிலும் இரண்டு படங்கள் மம்தாவிடம் உள்ளதாம். அதில் ஒரு படத்தில் என்.டி.ஆர். ஜூனியருடன் இணைந்து நடிக்கிறார்.
அறுவடை மூலம் தமிழில் தனது அறுவடைக் காலம் தொடங்கும் என்ற படா நம்பிக்கையில் உள்ளார் மம்தா.


Click it and Unblock the Notifications











