கேன்சரால இறந்துடுவேன்னு நினைக்கல.. சிலர் வர வாய்ப்புகளை கெடுக்கிறாங்க.. மம்தா மற்றும் அபிராமி பளிச்!
சென்னை: விஜய் சேதுபதியின் மகாராஜா படத்தில் நடித்துள்ள மம்தா மோகன்தாஸ் மற்றும் அபிராமி விஜய் சேதுபதியை போலவே அந்த படத்தை சில யூடியூப் சேனல்களுக்கு பேட்டியளித்து புரமோட் செய்து வருகின்றனர். இளம் நடிகைகள் எல்லாம் படத்தின் புரமோஷனுக்கே வராமல் தட்டிக் கழித்து வரும் நிலையில், சீனியர் நடிகைகளின் சின்சியாரிட்டி ரசிகர்களை வெகுவாக கவர்கிறது.
கமல்ஹாசனின் விருமாண்டி படத்தில் நடித்து தமிழ் சினிமாவையே திரும்பி பார்க்க வைத்த அபிராமி வானவில், மிடில் கிளாஸ் மாதவன், சமுத்திரம், தோஸ்த் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். விருமாண்டி படத்துக்கு பிறகு சினிமாவில் மிகப்பெரிய இடைவெளியை விட்ட அபிராமி ஜோதிகா நடித்த 36 வயதினிலே படத்தில் மீண்டும் நடிக்க ஆரம்பித்தார்.

மலையாள படங்களில் நடித்து வந்த மம்தா மோகன்தாஸ் தமிழில் விஷாலுக்கு ஜோடியாக சிவப்பதிகாரம் படத்தில் நடித்தார். அதன் பின்னர் ஒரு சில தமிழ் படங்களில் நடித்த அவர் பல ஆண்டுகள் கழித்து தற்போது மகாராஜா படத்தில் விஜய் சேதுபதி மற்றும் அபிராமியுடன் இணைந்து நடித்துள்ளார்.
புற்றுநோய் பாதிப்பு: சிவப்பதிகாரம், குசேலன், குரு என் ஆளு, தடையற தாக்க மற்றும் எனிமி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள மம்தா மோகன்தாஸ் விஜய் சேதுபதியுடன் இணைந்து மகாராஜா படத்தில் நடித்துள்ளார். புற்றுநோய் பாதிப்பு காரணமாக சில ஆண்டுகள் சினிமாவை விட்டு விலகி இருந்தார். புற்றுநோயுடன் போராடி நடிகை மனிஷா கொய்ராலா மீண்டு நடித்து வருவதை போல மம்தா மோகன் தாஸும் நடித்து வருகிறார்.
இறந்துடுவேன்னு நினைக்கல: கேன்சர் பாதிப்பு காரணமாக நான் இறந்துடுவேன்னு பலர் சொன்ன போது கூட நான் அதை நம்பல, உடலில் கேன்சர் கட்டி ஒவ்வொரு இடத்துக்கா டிராவல் செய்து கொண்டிருந்த போது, ஓ நீ உன் வேலையை பார்க்குறியா நான் என் வேலையை பார்க்கிறேன் என நடிக்க ஆரம்பித்து விட்டேன். ஒரு சில தமிழ் படங்களை உடல்நலக்குறைவு காரணமாக தவிர்த்து விட்டேன் எனக் கூறியுள்ளார்.
மீண்டும் கமலுடன்: 2004ம் ஆண்டு விருமாண்டி படத்தில் கமலுக்கு ஜோடியாக படு நெருக்கமாக நடித்த அபிராமியை ரசிகர்கள் இன்றளவும் விருமாண்டி அபிராமி என்றே கொண்டாடுகின்றனர். 20 ஆண்டுகள் கழித்து மீண்டும் கமலுடன் தக் லைஃப் படத்தில் அதுவும் மணிரத்னம் இயக்கத்தில் நடித்து வருகிறார். அவர் பேசும் போது, மீண்டும் கமல் சாருடன் நடிக்க வாய்ப்பு கிடைத்தது பெரிய விஷயம் எனக் கூறினார். மேலும், பல முறை நான் கம்பேக் கொடுத்து விட்டேன். இப்பவும் என்னை அணுகுபவர்கள் இந்த படம் உங்களுக்கு கம்பேக்காக அமையும் என்கின்றனர். எத்தனை தடவை தான் நான் கம்முவது என ஜாலியாக பேசியுள்ளார்.
சிலர் கெடுக்குறாங்க: அமெரிக்காவில் தான் இவர் இருக்கிறார் என முடிவெடுத்து பல பட வாய்ப்புகள் வராமலே போய் விடுகிறது என அபிராமி கூற, அதே அமெரிக்கா மேட்டரை வைத்தே எனக்கும் பட வாய்ப்புகள் வரவிடாமல் சிலர் கெடுக்கிறாங்க என மம்தா மோகன் தாஸும் கூறியுள்ளார். இருவரும் இணைந்து விஜய் சேதுபதியுடன் மகாராஜா படத்தில் வெயிட்டான ரோல் செய்துள்ள நிலையில், தொடர்ந்து படத்திற்கான புரமோஷனை செய்து வருகின்றனர். வரும் ஜூன் 14ம் தேதி மகாராஜா ரிலீஸ் ஆகிறது.


Click it and Unblock the Notifications











