கொரோனா மிரட்டி விரட்டினாலும் தோழிகளுடன் ஜாலி ட்ரிப்.. அமெரிக்கா சென்றுள்ள பிரபல ஹீரோயின் அதகளம்!

By

லாஸ் ஏஞ்சல்ஸ்: கொரோனா காலத்திலும் தனது தோழிகளுடன் அமெரிக்காவில் ஜாலி ட்ரிப் அடித்துள்ளார் பிரபல நடிகை.

Recommended Video

4 படங்களின் part-2 | காத்திருந்த Sequel படங்கள் Ready | Thirukumaran

கொரோனா தீவிரமடைந்த நேரத்தில் கேரளாவில் இருந்த நடிகை மம்தா மோகன்தாஸ், சிறப்பு விமானம் மூலம் கடந்த மாதம் அமெரிக்காவுக்குப் பறந்தார்.

இப்போது அங்கு இருக்கும் மம்தா, இந்த கொரோனா காலத்திலும் ஜாலி டிரிப் அடித்துள்ளார். அங்கு சில இடங்களை தோழிகளுடன் சுற்றிப் பார்த்துள்ளார்.

கொரோனா தீவிரம்

கொரோனா தீவிரம்

இவர், தமிழில், விஷால் நடித்த சிவப்பதிகாரம், ரஜினி நடித்த குசேலன், மாதவன் நடித்த குரு என் ஆளு, அருண் விஜய்யின், தடையறத் தாக்க உட்பட சில படங்களில் நடித்துள்ளார். மலையாளத்தில் பல படங்களில் நடித்துள்ளார். தமிழில், வில்லு படத்தில் இடம்பெற்ற டாடி மம்மி வீட்டில் இல்லை என்பது உட்பட பல பாடல்களையும் பாடி இருக்கிறார். மியூசிக் வீடியோ ஒன்றில் நடிப்பதற்காக இவர், துபாய் சென்றிருந்தபோதுதான் கொரோனா தீவிரம் அடைந்தது.

லாஸ் ஏஞ்சல்ஸ்

லாஸ் ஏஞ்சல்ஸ்

இதனால், அங்கிருந்து அவசரமாகக் கொச்சி திரும்பினார் நடிகை மம்தா. அங்கு தனது வீட்டில் 14 நாட்கள் தனிமைப்படுத்திக் கொண்டார். இதுபற்றி அப்போது தனது சமூக வலைதளத்தில் தெரிவித்திருந்தார். இந்நிலையில் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸுக்குச் சென்றுள்ள அவர், கேன்சரால் பாதிக்கப்பட்டவர். கேன்சருக்கு அமெரிக்காவில்தான் சிகிச்சை பெற்று குணமானார்.

அனைவருக்கும் நன்றி

அனைவருக்கும் நன்றி

இதையடுத்து அங்கேயே வசித்து வருகிறார். படப்பிடிப்பு என்றால் மட்டுமே இந்தியா வந்து செல்கிறார். அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸுக்கு கடந்த மாத தொடக்கத்தில் மீண்டும் திரும்பிய அவர், 'அதிகாரபூர்வமாக லாஸ் ஏஞ்சல்ஸுக்கு வந்திருக்கிறேன். எனது பயணம் ஒரு பெரிய கதை. அதை பிறகு சொல்கிறேன். நான் திரும்பி இங்கு வருவதற்கு உதவிய அனைவருக்கும் நன்றி' என்று கூறியிருந்தார்.

சூடாக இருக்கிறதா?

சூடாக இருக்கிறதா?

இந்நிலையில், அவர் அங்கு தோழிகளுடன் ஜாலி ட்ரிப் சென்றுள்ளார். இது தொடர்பான சில புகைப்படங்களை இப்போது தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. வெயிலில் நின்று எடுத்துள்ள ஒரு போட்டோவுக்கு கேப்ஷனாக, இது சூடாக இருக்கிறதா, இல்லை நான் ஹாட்டாக இருக்கிறேனா? என்று கேட்டுள்ளார். இதற்கு பலர் நீங்கள்தான் என்று கூறியுள்ளனர். இந்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X