'என் பயணம் பெரும் கதை..' கட்டுப்பாடுகள் தளர்ந்ததும்.. அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் பறந்த ஹீரோயின்!

By

கொச்சி: லாக்டவுன் கட்டுப்பாடுகள் தளர்வு செய்யப்பட்டதை அடுத்து பிரபல நடிகை அமெரிக்கா பறந்துள்ளார்.

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் கடும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவிலும் நாளுக்கு நாள் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.

தற்போதைய நிலவரப்படி 2,93,754 பேர் இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

நடவடிக்கை

நடவடிக்கை

8 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். சர்வதேச அளவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நாடுகளின் வரிசையில் இந்தியா, 4வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. இதைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் கடும் நடவடிக்கை எடுத்து வருகின்றன. இது ஒரு பக்கம் இருந்தாலும் கடந்த 2 மாதத்துக்கும் மேல் விதிக்கப்பட்டிருக்கிற லாக்டவுனில் சில கட்டுப்பாடுகளில் தளர்வு செய்யப்பட்டுள்ளன.

சிறப்பு விமானம்

சிறப்பு விமானம்

இதையடுத்து பிரபல நடிகை ஒருவர், இயக்கப்பட்ட சிறப்பு விமானம் மூலம் அமெரிக்காவுக்கு பறந்துள்ளார். தமிழில், கரு பழனியப்பன் இயக்கத்தில் விஷால் நடித்த சிவப்பதிகாரம், ரஜினி நடித்த குசேலன், மாதவன் நடித்த குரு என் ஆளு, அருண் விஜய்யின், தடையறத் தாக்க உட்பட சில படங்களில் நடித்திருப்பவர், மலையாள நடிகை மம்தா மோகன்தாஸ்.

கொச்சி திரும்பினார்

கொச்சி திரும்பினார்

மலையாளத்தில் பல படங்களில் நடித்துள்ளார். தமிழில், வில்லு படத்தில் இடம்பெற்ற டாடி மம்மி வீட்டில் இல்லை என்பது உட்பட பல பாடல்களையும் அவர் பாடியுள்ளார். இவர், மியூசிக் வீடியோ ஒன்றில் நடிப்பதற்காக சமீபத்தில் துபாய் சென்றிருந்தபோதுதான் கொரோனா தீவிரம் அடைந்தது. இதையடுத்து அவர் அவசரமாக கொச்சி திரும்பினார்.

லாஸ் ஏஞ்சல்ஸ்

லாஸ் ஏஞ்சல்ஸ்

தனது வீட்டில் தன்னையே தனிமைப்படுத்திக் கொண்டார். இதுபற்றி அவர் தெரிவித்திருந்தார். இந்நிலையில் அவர் மீண்டும் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகருக்கு சென்றுள்ளார். கேன்சரால் பாதிக்கப்பட்டிருந்த நடிகை மம்தா, அங்கிருந்துதான் சிகிச்சை பெற்று குணமானார். இதையடுத்து அங்கேயே வசித்து வருகிறார். படப்பிடிப்பு என்றால் மட்டுமே இங்கு வந்து செல்கிறார்.

தனிமைப்படுத்தல்

தனிமைப்படுத்தல்

இந்நிலையில் அவர் இப்போது லாஸ் ஏஞ்சல்ஸ் நகருக்கு திரும்பியுள்ளார். இதுபற்றி அவர் கூறும்போது, 14 நாள் தனிமைப்படுத்தலை முடித்துவிட்டேன். அதிகாரபூர்வமாக லாஸ் ஏஞ்சல்ஸுக்கு வந்திருக்கிறேன். எனது பயணம் ஒரு பெரிய கதை. அதை பிறகு சொல்கிறேன். நான் திரும்பி இங்கு வருவதற்கு உதவிய அனைவருக்கும் நன்றி' என்று தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X