விரைவில் திருமணம்... - மம்தா அறிவிப்பு

சிவப்பதிகாரம் படத்தில் விஷால் ஜோடியாக அறிமுகமானவர் மம்தா. சொந்த ஊர் கேரளா.
ரஜினியுடன் குசேலன், மாதவனுடன் குரு என் ஆளு போன்ற படங்களில் நடித்தார். தற்போது அருண் விஜய் ஜோடியாக தடையற தாக்க படத்தில் நடித்து வருகிறார்.
தெலுங்கில் நடிப்பு, பின்னணி பாடுவது என படுபிஸியாக உள்ளார். மலையாளத்திலும் முன்னணி நடிகையாக உள்ளார்.
இந்த நிலையில் சென்னை வந்திருந்த அவர் நேற்று நிருபர்களைச் சந்தித்தார். அவர் கூறுகையில், "தடையற தாக்க படத்தில் எனக்கு முக்கியமான வேடம். கதையும் பிடித்தது. எனவே நடிக்க சம்மதித்தேன். மலையாளத்தில் நடித்த 'நயிகர' படம் ரிலீசுக்கு தயாராகிறது. அதில் ஒரு பாடலும் பாடி உள்ளேன்.
சமீபத்தில் கொச்சில் நடந்த பேஷன் ஷோவுக்கு என்னை தூதுவராக நியமித்தனர். ஒரே வாரத்தில் பேஷனில் பெரிய மாற்றத்தை கொண்டு வர முடியாது. ஆனாலும் அந்த ஷோ பேஷன் பிரியர்களுக்கு நல்ல வழியை காட்டியது.
எனக்கு பெற்றோர் மாப்பிள்ளை பார்க்கின்றனர். பொருத்தமான வரன் அமைந்தால் விரைவில் திருமணம் செய்து கொள்வேன். கடந்த இரு வருடங்களாக தமிழ் படங்களில் நடிக்கவில்லை. இயக்குனர் மகிழ் திருமேனி 'தடையற தாக்க' படத்துக்காக மீண்டும் அழைத்து வந்துள்ளார். இந்தப் படம் தமிழில் எனக்கு முதல் வெற்றியைத் தரும் என்ற நம்பிக்கை உள்ளது," என்றார்.


Click it and Unblock the Notifications











