»   »  எம்மா தொங்காமம்தா!

எம்மா தொங்காமம்தா!

Subscribe to Oneindia Tamil

சிவப்பதிகார நாயகி மம்தா மோகன்தாஸ், எம்மா தொங்கா என்ற தெலுங்குப் படத்தில் அம்மம்மா என்று திணறும்அளவுக்கு கிளாமரில் துள்ளி ஆடியுள்ளாராம்.

கேரளத்து கிளுகிளு பாப்பா மம்தா மோகன்தாஸ் லங்கா என்ற படத்தில் சுரேஷ் கோபியுடன் இணைந்து கிளாமர்கொட்டமடித்து கேரளத்து ரசிகர்களை இம்சித்தவர்.

அங்கிருந்து தமிழுக்கு வந்த அவர் சிவப்பதிகாரம் படத்தில் விஷாலுடன் இணைந்து நடிப்புத் திறமை காட்டினார்.இதிலும் அவர் கிளாமரில் குறை வைக்கவில்லை.

இப்போது தமிழோடு சேர்த்து தெலுங்கிலும் ஆர்வம் காட்ட ஆரம்பித்துள்ளார் மம்தா (அப்ப மலையாளம்,அவ்ளோதானா?). எம்மா தொங்கா என்ற படத்தில் மம்தா தனித்திறமை காட்டி கலக்கி வருகிறாராம்.

இந்தப் படம் புராணப் படமாம். இதில் மோகன்பாபு எமன் வேடத்தில் வருகிறார். மம்தாவுக்கு அழகு சுந்தரிரம்பை வேடமாம். ரம்பை வேடத்தில் நடிப்பவர் சும்மா நடிக்க முடியுமா? அதனால் படு கிளாமராக இப்படத்தில்ஆட்டம் போட்டுள்ளாராம் மம்தா.

கிளுகிளுப்பூட்டும் வகையில், கில்லியான பல காட்சிகள் மம்தாவுக்காக வைக்கப்பட்டுள்ளதாம். நடிக்க வரும்முன்பே மம்தா கிளாமர் காட்டத் தயக்கம் இல்லை என பச்சைக் கொடி காட்டி விட்டாராம்.

மணவாடுகளை பிரமிப்பில் ஆழ்த்தி பின்னி எடுத்து விட உறுதி பூண்டுள்ளாராம் மம்தா. படு கவர்ச்சியாக நடித்துதிரிஷா, நயனதாரா, இலியானாவை ஏறக்கட்டி விட்டு தெலுங்கிலும் வெற்றிக் கொடி நாட்டி விடும் தீர்க்கமானமுடிவில் மம்தா இருப்பது போலத் தெரிகிறது.

கவர்ச்சி ஹோதாவில் மம்தாவும் முழு வீச்சில் இறங்கி விட்டதால் அங்கு ஏற்கனவே எக்குத் தப்பாக நடித்துக்கொண்டிருக்கும் நடிகைகளுக்கு ஏடாகூடமான இடத்தில் எலி கடித்தது போல கடுப்பாக இருக்கிறதாம்.

அசத்துத்தா!

Read more about: mamtha in telugu films
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil