»   »  தாம் தூம் மம்தா!

தாம் தூம் மம்தா!

Subscribe to Oneindia Tamil

சிவப்பதிகாரத்தைத் தொடர்ந்து மம்தா தாம் தூம் என திறமை காட்ட வருகிறார்.

தீபாவளி படத்தில் நடித்து வரும் ஜெயம் ரவி அடுத்து நடிக்கும் படம் தான் தாம் தூம். இப்படத்தை கேமரா மேன்ஜீவா இயக்கவுள்ளார். இதில் ஜெயம் ரவிக்கு இரண்டு ஜோடிகள் என கூறியிருந்தனர். ஆனால் ஹீரோயின்கள்யார் என்பது தெரிவிக்கப்படாமல் இருந்தது.

இப்போது இருவரில் ஒருவர் யார் என்பது கசிந்துள்ளது. சிவப்பதிகார நாயகி மம்தா, ஜெயம் ரவியின்ஜோடிகளில் ஒருவராக நடிக்கவுள்ளார். சமீபத்தில்தான் இதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்துப் போட்டாராம்மம்.

இப்படத்தில் மம்தாவுக்கு செம க்யூட்டான வேடமாம். பின்னிப் பெடலெடுக்க தயாராகி வருகிறார் மம்தா.சிவப்பதிகாரம் படம் தனக்கு நல்ல பிளாட்பார்ம் போட்டுக் கொடுத்துள்ளதால் அதை அப்படியே தக்க வைத்துக்கொள்ள இந்த தாம் தூம் உதவும் என நம்புகிறாராம்.

தொடர்ந்து தமிழில் கவனம் செலுத்தப் போவதாகவும்,அப்படியே தெலுங்கிலும் தேட்டையைப் போடஉத்தேசித்துள்ளதாகவும் கூறுகிறார் மம்தா.

தாய் மொழி மலையாளத்தில் இப்போதைக்கு நடிக்கும் எண்ணம் இல்லையாம். தமிழில் நல்ல வரவேற்புஇருப்பதால் இங்குதான் தனது பூரா கவனமும் இருப்பதாக புன்சிரிப்புடன் கூறுகிறார் மம்தா.

மமதை ஏறாமல் நடித்தால் தமிழில் உச்சிக்குப் போகலாம்!

Please Wait while comments are loading...