»   »  பாடும் நிலா மம்தா!

பாடும் நிலா மம்தா!

Subscribe to Oneindia Tamil

நடிப்போடு, பாட்டுப் பாடி சைடில் சில்லரை சேர்க்கவும் ஆரம்பித்திருக்கிறார் மம்தா மோகன்தாஸ்.

மணக்கும் மலையாள மல்லிகையான மம்தா, மலையாளத்தில் நடித்த லங்கா படத்தில் காட்டிய கிளாமர் அவரை தமிழுக்கும், தெலுங்குக்கும்இழுத்து வந்து விட்டது.

சிவப்பதிகாரம் மூலம் தமிழில் தனது வேட்டையை ஆரம்பித்துள்ள மம்தா இப்போது தெலுங்கில் தீவிர கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளார்.தமிழில் ஓவர் கிளாமர் காட்ட முடியாது என்பதாலும், டப்பு குறைச்சல் என்பதாலும் தெலுங்குப் பக்கம் கண்களை சுழல விட்டுள்ளார்.

இவரது முயற்சியின் பலனாக எம்ம தொங்கா, ராக்கி என இரு படங்களில் நடித்து விட்டார். இதில் எம்ம தொங்காவில், மம்தாவின் கிளாமர்,படத்தின் நாயகன் ஜூனியர் என்.டி.ஆரை ரொம்பவே ஈர்த்து விட்டதாம். அடுத்த படத்திலும் வாய்ப்பு தருவதாக வாக்களித்துள்ளாராம்.

அதேபோல இப்போது டான் படத்தில் நாகார்ஜூனாவுடன் ஜோடி போடுகிறார் மம்தா. முதலில் இந்த வேடத்தில் திரிஷாதான் நடிப்பதாகஇருந்தது. ஆனால் திரிஷா திடீர் என ஜகா வாங்கி விட்டதால், கடுப்பான நாகார்ஜூன், மம்தாவைப் பிடித்துப் போட இயக்குநர் லாரன்ஸ்ராகவேந்திராவுக்கு உத்தரவிட அவரும் மம்தாவை புக் பண்ணி விட்டார்.

டான் படம் மூலம் தெலுங்கு ரசிகர்களை கலகலக்க வைக்க தயாராகி வருகிறார் மம்தா. அத்தோடு ராக்கி படத்தில் அவர் ஒரு பாடலும்பாடியுள்ளார். அந்தப் பாட்டு ஹிட் ஆகி விடவே இப்போது அவரைப் பாடவும் கூப்பிடுகிறார்களாம். இதனால் டபுள் ஜாலியாகி விட்டார் மம்தா.

இப்போது ஜகடம் என்ற படத்தில் அவரைப் பாட வைத்துள்ளாராம் இசையமைப்பாளர் தேவிஸ்ரீபிரசாத். தொடர்ந்து சில படங்களில் பாடும்வாய்ப்பு மட்டும் வந்துள்ளதாம். அவற்றையும் ஏற்க முடிவு செய்துள்ளார் மம்தா. நடிப்போடு தொடர்ந்து பாடவும் போகிறாராம் மம்தா.

ஏற்கனவே மலையாளத்தில் பிக் பி படத்தில் மம்முட்டியுடன் நடிக்கிறேன். தெலுங்கிலும் முன்னணி ஹீரோக்களுடன் நிறையவாய்ப்பு வருகிறது.தமிழில்தான் இன்னும் ஆணித்தரமாக ஆக்கர் வைக்காமல் உள்ளேன். அங்கேயும் ஒரு ரவுண்டு வருவேன்என்று நெஞ்சு நிறைய மகிழ்ச்சியுடன் சொல்கிறார் மம்தா.

அசத்தும்மா மம்தா!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil