வறண்டு போன மம்தா
மம்தா காட்டில் பெய்து வந்த மழை இப்போது ஓய்ந்து போய் வறட்சி தலைவிரித்தாடுகிறதாம்.
மலையாளத்தில் வெளியான லங்கா படத்தில் கவர்ச்சிப் புரட்சி செய்தவர் மம்தா. அதை முதலீடாக வைத்து தமிழுக்கும் வந்தார். சிவப்பதிகாரம் படத்தில் விஷாலுடன் இணைந்து நடித்தார். பெரிய அளவில் ரசிகர்களை கவரவில்லை என்றாலும் முதலுக்கு மோசமில்லை என்ற ரகத்தில் இருந்தார் மம்தா.தமிழ் மார்க்கெட் வேகம் பிடிக்கும் என்று நினைத்திருந்த மம்தாவுக்கு பெரும் அதிர்ச்சியைக் கொடுப்பதாக இருந்தது நிஜத்தில் நடந்தது. புதிதாக வாய்ப்பு கிடைத்த தாம் தூம் படத்தில் நடிக்க ஆசையாக இருந்தார். ஆனால் துரதிர்ஷ்டம், முத்திப் போன முகமாக இருந்ததால் மம்தாவை நிராகரித்து விட்டார்களாம்.
இதே போல, லாரன்ஸ் ராகவேந்திரா புதிதாக தெலுங்கில் இயக்கவுள்ள படத்திலிருந்தும் இப்போது கல்தா கொடுக்கப்பட்டுள்ளாராம் மம்தா. ரெண்டு படத்தில் அனுஷ்காவின் நடிப்பை எதேச்சையாக பார்த்த லாரன்ஸ், அதில் அனுஷ்காவின் அசத்தல் அழகையும், கிளாமர் வாகையும் பார்த்து அரண்டு போய், தனது படத்தில் புக் பண்ணி விட்டார். மம்தாவுக்கு கல்தா கொடுத்து விட்டார்.
இப்படி அடுத்தடுத்து வந்த அதிர்ச்சியால் கலங்கிப் போயிருந்த மம்தாவுக்கு இன்னொரு இடி சித்தார்த் படம் மூலம் வந்தது. அட்டா என்ற அந்த தெலுங்குப் படத்தில் சித்தார்த்துக்கு ஜோடியாக நடிப்பதாக இருந்தார் மம்தா. ஆனால் போட்டோ செஷனுக்குப் பிறகு மம்தா பொருத்தமாக இல்லை என்று கூறி ரிஜக்ட் செய்து விட்டார்களாம்.
இப்படி பட வாய்ப்புகளை தொடர்ந்து இழந்து வருவதால் என்ன செய்து வாய்ப்பு பிடிக்கலாம் என்று ஆழமாக யோசித்து வருகிறாராம் மம்தா.
எடுக்க வேண்டியதுதானே அந்த அஸ்திரத்தை!


Click it and Unblock the Notifications











