»   »  உதறிய மம்தா!

உதறிய மம்தா!

Subscribe to Oneindia Tamil
தெலுங்குப் படத்தில் நடிக்க வந்த வாய்ப்பை வேண்டவே வேண்டாம் என்றுஉதறியுள்ளார் மம்தா மோகன்தாஸ்.

தான் நடித்த லங்கா என்ற முதல் மலையாளப் படத்திலேயே வரலாறு காணாதஅளவுக்கு கிளாமரில் குச்சியாட்டம் போட்டவர் மம்தா. சாதாரண மலையாளப்படங்களில் முதல் முறையாக என்று கூறும் அளவுக்கு அவரது கிளாமர் தூக்கலாகஇருந்தது.

இதையடுத்து தமிழிலும் அவருக்கு சில பட வாய்ப்புகள் வந்தன.

சிவப்பதிகாரம் படத்தில் விஷாலுடன் ஜோடி போடுகிறார் மம்தா.

வழக்கமாக மலையாளத்திலிருந்து தமிழுக்கு வரும் நடிகைகள் அப்படியேதெலுங்குக்குத் தாவுவார்கள். காரணம் தமிழை விட டப்பு அங்கே அதிகம் என்பதால்.ஆனால் இதற்கு நேர்மாறாக இருக்கிறார் மம்தா.

லங்காவில் அவர் போட்ட காளியாட்டத்தைப் பார்த்து வியந்து போன சில தெலுங்குப்படத் தயாரிப்பாளர்கள், இவரல்லவோ நாம் தேடிய நடிகை என்று சந்தோஷமாகிமம்தாவை அணுகி எங்க படத்திலேயும் அசத்த வேண்டும் என்று வேண்டுகோள்விடுத்தனர்.

ஆனால் முடியவே முடியாது என்று கூறி விட்டாராம் மம்தா. குழப்பமாகிப் போனமணவாடுகள், ஏனுங்கோ என்று அப்பாவித்தனமாக கேட்க,

லங்காவில் நான் கிளாமராக நடித்தேன் என்றால் அந்தக் கதை அப்படி. அதற்காகஎல்லாப் படங்களிலும் காட்டுவேன் என்று எப்படி நீங்கள் எதிர்பார்க்கலாம். அந்தப்படத்தோடு கிளாமர் சரி.

இனி வித்தியாசமான ரோல்களில் நடிக்கத்தான் ஆசையாக இருக்கிறேன். அதற்குதமிழும் மலையாளமுமே சரி என்று கூறி அனுப்பி வைத்து விட்டாராம்.

மம்தாவைச் சொல்லியும் குற்றம் இல்லை.

தெலுங்கில் எதையும் நார்மலாகவே செய்வதில்லை. காதலித்தாலும் அதுமுரட்டுத்தனமாகத்தான் இருக்கும், சண்டை போட்டாலும் முரட்டுத்தனம்தான். சும்மாகூட நிற்க மாட்டார்கள் தெலுங்குப் பட ஹீரோக்கள், தரையில் கிடக்கும் எறும்பைப்போட்டு மிதித்து, நசுக்கியபடி தான் வசனம் பேசுவார்கள்.

அதில் தாக்குப் பிடிக்க த்ரிஷா மாதிரி ஸ்பெஷல் திறமை வேண்டும். அது மம்தாவிடம்இல்லை போலிருக்கிறது.

மம்தாவின் இப்போதைய ஒரே எய்ம், தமிழில் நிலையான இடத்தைப் பிடிப்பதுதானாம்.

Read more about: mamtha avoids telugu films
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil