கையும் ஓடலை... காலும் ஓடலை...!

மலையாளத்தில் சமீபத்தில் அவர் நடிப்பில் வெளிவந்துள்ள படம் அன்வர். இந்தப் படம் தொடர்பாக வெளியான அவரது ஸ்டில்களைப் பார்த்துவிட்டு சற்றும் எதிர்பாராத ஒரு இயக்குநரிடமிருந்து போன் வந்ததாம் மம்தாவுக்கு.
அவர் அமீர்..!
'உங்க ஸ்டில்ஸ், தோற்றம் சிறப்பா இருக்கு. ஆதிபகவன் படத்துல ஒரு பவர்புல் கேரக்டர் இருக்கு. பண்றீங்களா?' என்று கேட்டாராம்.
'மகிழ்ச்சியில் கையும் ஓடலை... காலும் ஓடலை... இதென்ன கேள்வி? அவர் பட வாய்ப்பை யாராவது மறுப்பாங்களா.. நான் உடனே ஓகே சொல்லிட்டேன். என்னுடைய காரெக்டர்தான் படத்தின் கதையில் பெரும் திருப்பங்களை ஏற்படுத்துகிறது. அதனால் உடனடியாக ஒப்புக் கொண்டேன்', என்கிறார் மம்தா.
இந்தப் படத்தில் இணையதளம் ஒன்றில் புகைப்படக்காரராகப் பணியாற்றும் ஒருவருக்கும் நடிக்க வாய்ப்பு தந்துள்ளார் அமீர். பிரஸ் மீட்டில் நேரடியாக வாய்ப்பு கேட்ட அவருக்கு கிடைத்த உடனடி வாய்ப்பு இது.


Click it and Unblock the Notifications











