கேன்சரிலிருந்து மீண்டும் மீண்டு வந்த மம்தா மோகன் தாஸ் - கைநீட்டி ஏற்றுக்கொண்ட மல்லுவுட்!
சென்னை: இரண்டாவது முறையாக கேன்சரால் பாதிக்கப்பட்ட நடிகை மம்தா மோகன்தாஸ் அதிலிருந்து மீண்டு வந்துள்ளார்.
ஏற்கனவே ஒருமுறை புற்று நோயால் பாதிக்கப்பட்டார் மம்தா மோகன்தாஸ். இதையடுத்து நடிப்பதை நிறுத்தி விட்டு தீவிர சிகிச்சை பெற்றுக் கொண்டார்.

முதலாவது பாதிப்பு:
இதன் பலனாக அந்தப் பாதிப்பிலிருந்து மீண்டு புதுப் பொலிவு பெற்று திரும்பினார்.

கெளரவம் செய்த மல்லுவுட்:
கேன்சரால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்துக் கொண்ட மம்தா மோகன்தாஸை மலையாள திரையுலகம் எப்போதும் கௌரவமாகவே நடத்தியிருக்கிறது.

குவிந்த வாய்ப்புகள்:
அவர் முதல்முறை சிகிச்சை எடுத்துக் கொண்டு, நலமுடன் திரும்பிய போது வாய்ப்புகளை தாராளமாக வழங்கியது மலையாள சினிமா.

இரண்டாவது சோகம்:
சமீபத்தில் மீண்டும் கேன்சரின் பாதிப்பு மம்தாவிடம் தெரிய ஆரம்பித்தது. மீண்டும் சிகிச்சை எடுத்துக் கொண்டார்.

குட்டை தலைமுடி:
தலைமுடி கொட்டிய நிலையில் குட்டை தலைமுடியுடன் படங்களில் நடித்தார். அதிலிருந்து மீண்டும் மீண்டு வந்துள்ளார் மம்தா மோகன் தாஸ்.

புதிய ஆரம்பம்:
மலையாளத்தின் பிரபல இயக்குனர் ஷஃபி இயக்கத்தில் திலீப் நடிக்கும் புதிய படத்திலும் மம்தா மோகன்தாஸ்தான் ஹீரோயின். இதற்கு முன் திலீபும், மம்தாவும் பாசஞ்சர், மை பாஸ் படங்களில் இணைந்து நடித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











