மம்தாவின் காட்பாதர்

By Staff


நடிகையாக அறிமுகமாகி இப்போது பின்னணிப் பாடகியாகவும் மாறி விட்ட மம்தா மோகன்தாஸ், தன்னைத் தேடி வரும் பாடல் வாய்ப்புகளை, தனது புதிய காட்பாதர் இசையமைப்பாளர் தேவிஸ்ரீபிரசாத்தின் ஆலோசனையைக் கேட்டு விட்டுத்தான் ஓ.கே. சொல்கிறாராம்.

Click here for more images

முதல் தர நடிகைகள் கவர்ச்சி காட்டினால் மலையாள சினிமா ரசிகர்கள் ஏற்றுக் கொள்வதில்லை. ஆனால் அந்த நாடித் துடிப்பைப் புரிந்து கொள்ளாமல், சுரேஷ் கோபியுடன் நடித்த லங்கா படத்தில் மிதமிஞ்சிய கவர்ச்சி காட்டி நடித்திருந்தார் மம்தா.

இதையடுத்து அவரை ஓரம் கட்டி விட்டது மலையாள சினிமா. இதனால் தமிழுக்கு வந்தார் மம்தா. ஆனால் தமிழில் அவருக்கு சரியான வாய்ப்புகள் கிடைக்கவில்லை. விஷாலுடன் நடித்த படத்துடன் ஏறக்கட்டப்பட்ட மம்தா பின்னர் தெலுங்குக்குப் போனார். அங்கு ஓரளவுக்கு வாய்ப்புகள் வந்தன.

ஆனால் எதிர்பாராதவிதமாக பாடும் வாய்ப்பு மம்தாவைத் தேடி வந்தது. அவரது குரல் வளம் பின்னணிப் பாடகிகளுக்கு உரியதாக இருந்ததால் தெலுங்குத் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளரான தேவிஸ்ரீபிரசாத், தனது இசையில் மம்தாவை பாட வைத்தார். அது ஹிட் ஆகவே, தொடர்ந்து பல பாடல் வாய்ப்புகள் மம்தாவைத் தேடி வந்தன.

இதனால் சந்தோஷமான மம்தா, தனக்குப் பிடித்த பாடலாக இருந்தால் அதை ஏற்றுக் கொள்கிறாராம். அதேசமயம், தன்னைத் தேடி வரும் பாடல்களை, தேவிஸ்ரீபிரசாத்தின் ஆலோசனையைக் கேட்டு, அவர் சரி என்று சொன்னால்தான் ஏற்றுக் கொள்கிறாராம். அவருக்குப் பிடிக்கவில்லை என்றால் மம்தாவுக்கும் பிடிக்காதாம்.

இதனால் தெலுங்குத் திரையுலகில், மம்தாவையும், தேவிஸ்ரீபிரசாத்தையும் இணைத்து கிசுகிசுக்கள் கிளம்பியுள்ளனவாம். ஏற்கனவே இப்படித்தான் சுரேஷ் கோபியுடன் சேர்த்து லங்கா படத்தில் நடித்தபோது படு தீவிரமாக கிசுகிசுக்கப்பட்டார் மம்தா. இப்போது பிரசாத்துடன் பேசப்படுகிறார்.

காட்பாதர் காதலர் ஆவாரா? மம்தாவுக்கே வெளிச்சம்!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X