Don't Miss!
- Lifestyle இந்த உணவுகளை கண்டிப்பாக பிரஷர் குக்கரில் சமைக்கக்கூடாது.. ஏன் தெரியுமா?
- Finance டீ கடையில் கூட இப்ப கிரெடிட் கார்டு பேமெண்ட் தான்.. ரூ.1 லட்சம் கோடியை தாண்டி புதிய சாதனை..!
- News 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்: கர்நாடகா, கேரளா உட்பட் 13 மாநிலங்கள்- 88 தொகுதிகளில் நாளை வாக்குப் பதிவு!
- Automobiles துபாயில் சென்னை விமானத்தை தவறவிட்ட 15 வயது சிறுமி! அடுத்து நடந்த விஷயம் தான் அதிசயம்!
- Technology இதுதான் புதிய Infinix போன்.. 108MP கேமரா.. JBL சவுண்ட்.. 45W சார்ஜிங்.. எந்த மாடல்? எப்போது அறிமுகம்?
- Sports தோனியே சரி.. முஸ்தஃபிசுர்-க்கு பதிலாக வரும் ஸ்பின்னர்.. சிஎஸ்கே அணியில் நடக்கப் போகும் மாற்றம்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
மீண்டும் புற்று நோயிலிருந்து மீண்ட நடிகை மம்தா!
விஷால் ஜோடியாக 'சிவப்பதிகாரம்' படத்தில் நடித்தவர் மம்தா மோகன்தாஸ். குரு என் ஆளு, தடையற தாக்க, குசேலன் போன்ற படங்களிலும் நடித்துள்ளார். தெலுங்கு, மலையாளப் படங்களிலும் நடித்துள்ளார்.
மம்தாவுக்கு சில ஆண்டுகளுக்கு முன் புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டது. இதற்காக சிகிச்சை பெற்றார். பிறகு குணமடைந்து அந்த நோயில் இருந்து மீண்டார்.
அதன் பிறகுதான் அவர் தடையறத் தாக்க படத்திலும் நடித்தார்.
மம்தாவுக்கும், பக்ரைன் தொழில் அதிபர் பிரஜித் பத்மநாபனுக்கும் 2011-ல் திருமணம் நடந்தது. ஒரு வருடம்தான் சேர்ந்து வாழ்ந்தார்கள். பின்னர் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தார்கள். விவாகரத்தும் பெற்றனர்.
இதையடுத்து மம்தா மோகன்தாஸ் மீண்டும் நடிக்க வந்தார். மலையாள படங்களில் நடித்து வந்த அவருக்கு மீண்டும் புற்று நோய் தாக்கியது. இதையடுத்து மருத்துவமனையில் தங்கி கீமோதெரப்பி சிகிச்சை பெற்றார். தீவிர சிகிச்சைக்குப் பின் இப்போது குணமடைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார் மம்தா.