»   »  மங்கிய மம்தா!

மங்கிய மம்தா!

Posted By:
Subscribe to Oneindia Tamil

மம்தா மோகன்தாஸின் கேரியர் மங்க ஆரம்பித்துள்ளதாம். நடிப்பை விட்டு விட்டுபடிக்கப் போய்விட்டார் என்று மலையாள திரையுலகில் கிசுகிசுக்க ஆரம்பித்துள்ளனர்.

மயூகம் என்ற மலையாளப் படம்தான் மம்தா மோகன்தாஸின் முதல்படம். ஆனால்அப்படம் தோல்வி அடைந்தது. ஆனாலும் மம்தா கவனிகக்பபட்டார். இதனால்தொடர்ந்து மம்முட்டி, ஜெயராம் ஆகியோருடன் நடித்தார்.ஆனால் மோகன்லாலுடன் நடிக்ககிடைத்த வாய்ப்பு அவரது கையை விட்டுநழுவியது.

கீர்த்திசக்ராவில் (தமிழில் அரண்) அவர்தான் நடிப்பதாக இருந்ததது. ஆனால் திடீரெனஅவரைத் தூக்கி விட்டு கோபிகாவை போட்டு விட்டார்கள்.லங்கா என்ற படத்தில் மம்தா மோகன்தாஸ் காட்டிய கிளாமரைப் பார்த்து மலையாளதிரையுலகமே அரண்டு போனது.

அப்படத்தில் நடித்த போது சுரேஷ் கோபியுடன் நெருக்கமான நட்பு ஏற்பட்டு விட்டது.லங்கா படத்தை விட இந்த நட்புதான் ரொம்பப் பெரிதாக பேசப்பட்டது.மம்தாவின் புகழ் கரையைத் தாண்டி தமிழிலும் எட்டிப் பார்த்தது.

அவரது கிளாமரைப் பார்த்து வியந்த தமிழ்ப் படவுலகினர்தமிழுககும் வாங்க, தரிசனம்தாங்க என்று கூப்பிட ஆரம்பித்தனர். சிவப்பதிகாரம் படத்தில் மம்தாமோகன்தாஸ்தான் நாயகி. விஷாலுடன் இணைந்து நடிக்கவுள்ளார்.

இப்போது மேட்டர் என்னவென்றால், மம்தாவை கொஞ்ச காலமாக கேரளாப் பக்கம்காணவில்லையாம். மலையாளப் படம் எதிலும் அவர் நடிக்கவில்லையாம்.சிவப்பதிகாரம் மட்டும்தான் மம்தா கையில் உள்ளதாக கூறுகிறார்கள்.

இப்படத்தை முடித்து விட்டு லண்டனுக்குப் போய் மேற்படிப்பை தொடரப் போவதாககூறுகிறார்கள். மம்தாவின் சில குளறுபடிகளே அவரது கேரியர் தொங்கிப்போகமுக்கியக் காரணம் என்கிறார்கள். அத்தோடு சுரேஷ்கோபி விவகாரமும் சேர்ந்துஅவரது பெயரை நாறடிதத் விட்டதாம்.

மங்கிப் போன மார்க்கெட்டை தூக்கி நிறுத்தும் முயற்சியில மம்தாவும் ஈடுபடுவதாகத்தெரியவில்லை என்பதால் அவர் நடிப்பைவிட்டு விட்டு படிக்கப் போவதாககூறப்படும் செய்தியை நம்பித்தான் ஆக வேண்டும் போலிருக்கிறது.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil