மலையாளத்தில் மந்திரா!
பாலிவுட் செக்ஸி தேவதை மந்திரா பேடி, மல்லுவுட்டில் லேண்ட் ஆகியுள்ளார்.
நடிகையாக, மாடலாக, டிவி வர்னணையாளராக பல அவதாரம் எடுத்த மந்திரா பேடி, இந்தியைத் தாண்டி பிற மொழிகளிலும் அவ்வப்போது தலை, உடல் காட்டி வருகிறார்.மன்மனதில் சிம்புவுடன் சேர்ந்து அவர் ஆடிய கிளாமர் ஆட்டம் தமிழ் ரசிகர்களுக்கு இன்னும் மறந்திருக்காது. இந்த நிலையில் தற்போது மலையாள ரசிகர்களை மயக்க மலையாளப் படத்தில் நடிக்க கிளம்பியுள்ளார் மந்திரா.
ராஜீவ் நாத் இயக்கத்தில் உருவாகும், ஏழாம் முத்ரா என்ற படத்தில் நடிக்கிறார் மந்திரா பேடி. அவருடன் ஜோடி போடுவது சுரேஷ் கோபி. படத்தில் மந்திராவுக்கு கிளாமர் கேரக்டராம். சில காட்சிகளில் மேலாடை இல்லாமல் கிளாமர் ஆடை மட்டும் போர்த்திக் கொண்டு வருகிறாராம் மந்திரா.
இருப்பினும் எந்த இடத்திலும் ஆபாசம் இருக்காது என்கிறார் ராஜீவ் நாத். பெரும் ஹிட் ஆன காஸா பிளான்கா படத்தின் பாதிப்பு இந்தப் படத்தில் இருக்குமாம். படத்திற்கு இசையமைக்க இசைவு தருமாரு இசைஞானி இளையராஜாவை அணுகியுள்ளாராம் ராஜீவ் நாத்.
படத் தயாரிப்பாளர்களில் சுரேஷ்கோபியும் ஒருவராம். இணைத் தயாரிப்பாளராக இப்படத்தில் செயல்படுகிறாராம் மந்திரா.
லங்கா படத்தில் படு கிளாமராக நடித்த மம்தா மோகன்தாஸுடன் இணைந்து நடித்தார் சுரேஷ் கோபி. இப்போது மந்திராவின் டர்ன், இதிலும் வல்லிய கிளாமர் இருக்கும் என நம்பலாம்.


Click it and Unblock the Notifications











