அவங்களா இது? புக்கட்டில் மந்திரா எக்சர்சைஸ்... இன்ஸ்டாவைத் தெறிக்க விடும் ஆச்சரிய ஸ்டில்ஸ்...
மும்பை: புக்கட் தீவில் நடிகை மந்திராபேடி உடல் பயிற்சி செய்யும் வீடியோ, இன்ஸ்டாகிராமில் வைரலாகி வருகிறது.
பிரபல இந்தி நடிகை மந்திரா பேடி. இவர் தமிழில் மன்மதன் படத்தில் நடித்துள்ளார். சமீபத்தில் வெளியான சாஹோ படத்திலும் நடித்திருந்தார். அடுத்து ஜி.வி.பிரகாஷின் அடங்காதே படத்தில் நடித்துள்ளார். இந்தப் படம் விரைவில் வெளியாக இருக்கிறது.

திருமணம்
கிரிக்கெட் வர்ணனையாளராகவும் இருந்த இவர், இயக்குனர் ராஜ் கவுசலை, காதலித்து 1999 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஒரு மகன் இருக்கிறார்.
47 வயதிலும்...
47 வயதான மந்திரா பேடி, இந்த வயதிலும் கிளாமர் புகைப்படங்களை அவ்வப்போது வெளியிட்டு பரபரப்பை கிளப்புவார். இந்நிலையில் அவர் வெகேஷனுக்காக இப்போது புக்கட் தீவுக்கு சென்றுள்ளார்.

வைரல் வீடியோ
அங்கு இன்று காலை, ஓட்டல் டெர்ரஸில் இருந்து உடற்பயிற்சி செய்யும் வீடியோவை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவில் அவர் குறைந்த ஆடை அணிந்துள்ளார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

நம்பவே முடியலை
இதற்கிடையே அவர் பதிவிட்டுள்ள மற்றொரு பிகினி புகைப்படம் ஓவர் கிளாமராக இருக்கிறது. இந்தப் படமும் வைரலாகி வருகின்றன. அதற்கு கமென்ட் அடித்துள்ள ரசிகர்கள் சிலர், 'இந்த வயசுலயும் இப்படி உடற்பயிற்சி செய்றீங்களே... கிரேட் என்று கூறியுள்ளனர். இன்னும் சிலர், மந்திராபேடியா இது? நம்பவே முடியவில்லை என்று கூறியுள்ளனர்.


Click it and Unblock the Notifications











