»   »  மணிரத்னம் என்னை ஏமாற்ற மாட்டார்: நம்பிக்கையுடன் காத்திருக்கும் வாரிசு நடிகை

மணிரத்னம் என்னை ஏமாற்ற மாட்டார்: நம்பிக்கையுடன் காத்திருக்கும் வாரிசு நடிகை

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: இயக்குனர் மணிரத்னம் தன்னை கைவிட மாட்டார் என்று நம்பிக்கையுடன் காத்துள்ளார் நடிகை சையாமி கேர்.

பாலிவுட் நடிகை சபானா ஆஸ்மியின் உறவினரும், பிரபல இந்தி நடிகை உஷா கிரணின் பேத்தியுமானவர் சையாமி கேர். சாய் தரம் தேஜ் ஹீரோவாக நடித்த ரே என்ற தெலுங்கு படம் மூலம் நடிகையானார்.

படங்கள் தவிர்த்து விளம்பர படங்களிலும் நடித்து வருகிறார்.

மிர்சியா

மிர்சியா

சையாமி தற்போது மிர்சியா என்ற இந்தி படத்தில் நடித்து வருகிறார். தனது பாட்டி பிரபலமாக இருந்த பாலிவுட்டில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடிக்க விரும்புகிறார் சையாமி.

மணிரத்னம்

மணிரத்னம்

மணிரத்னம் ஓகே கண்மணி படத்தை முடித்த கையோடு தமிழ், தெலுங்கில் ஒரு படத்தை இயக்க திட்டமிட்டார். அந்த படத்தில் துல்கர் சல்மானை ஹீரோவாக போட விரும்பினார். துல்கருக்கு ஜோடியாக சையாமி கேரை தேர்வு செய்தார் மணி. ஆனால் அந்த படத்தை கிடப்பில் போட்டுவிட்டு கார்த்தியை வைத்து காற்று வெளியிடை படத்தை இயக்கி வருகிறார்.

சையாமி

சையாமி

மணி சார் படத்தில் நடிக்க அழைத்தார்கள். ஆடிஷனில் தேர்வு செய்யப்பட்டேன். இந்த படத்தை எப்பொழுது நான் எடுத்தாலும் நீ தான் ஹீரோயின் என மணி சார் என்னிடம் தெரிவித்தார் என்கிறார் சையாமி.

நம்பிக்கை

நம்பிக்கை

மணி சார் படத்தை கிடப்பில் போட்டாலும் நிச்சயம் அதில் நான் நடிப்பேன் என நம்புகிறேன். அவர் என்னை ஏமாற்ற மாட்டார். அதனால் நம்பிக்கையுடன் காத்திருக்கிறேன் என்று சையாமி தெரிவித்துள்ளார்.

English summary
Actress Saiyami Kher is waiting for director Maniratnam's next movie.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil