சுயசரிதை எழுதப்போகும் கேன்சரோடு போராடி மீண்டு வந்த மனீஷா கொய்ராலா

மும்பை: கேன்சரோடு போராடி மீண்டு வந்திருக்கும் நடிகை மனீஷா கொய்ராலா, தான் பட்ட கஷ்டங்களையும், அதிலிருந்து தான் கற்றுக்கொண்ட அனுபவப் பாடங்களையும் புத்தகமாக எழுத இருக்கிறாராம்.

மனீஷா கொய்ராலாவுக்கு கேன்சர் இருப்பது சென்ற வருடம் கண்டுபிடிக்கப்பட்டப் பிறகு, உடனடியாக அமெரிக்கா சென்று அதற்காக தீவிர சிகிச்சை மேற்கொண்டார். கேன்சரோடு போராடி தற்போது பூரண குணமடைந்துள்ள மனீஷா விரைவில் நடிப்பைத் தொடருவார் எனத் தெரிகிறது.

தற்போது, ஓய்வில் இருக்க திட்டமிட்டுள்ள மனீஷா கொய்ராலா, கேன்சரால் தான் பட்ட துயரங்களை தனது சுயசரிதையாக எழுதப் போகிறாராம்.

கேன்சர் ....

கேன்சர் ....

இந்தியனில் டெலிபோன் மணிபோல் சிரித்தவருக்கு சொந்த வாழ்க்கையில் பெரும்பாலும் கண்ணீரே பரிசாக கிடைத்தது. திருமண வாழ்வு கசந்ததால், மீண்டும் நடிப்பைத் தொடரலாம் என நினைத்தவருக்கு ‘கேன்சர்' மூலம் மீண்டும் சோதனை தலை தூக்கியது.

நல்ல முன்னேற்றம்...

நல்ல முன்னேற்றம்...

அசராத மனீஷா அமெரிக்காவில் தீவிர சிகிச்சை எடுத்துக் கொண்டார். தற்போது தனியாக ஷாப்பிங் செல்லும் அளவிற்கு உடலிலும், மனதிலும் தேறிவிட்டாராம்.

இந்தியா வருகை...

இந்தியா வருகை...

இம்மாத இறுதியில் அல்லது அடுத்த மாத தொடக்கத்தில் மனீஷா இந்தியாவிற்குள் அடி எடுத்து வைப்பார் என நம்பப்படுகிறது.

நவம்பரில் நடிப்பு...

நவம்பரில் நடிப்பு...

இந்தியா வந்தாலும் மனீஷா முழு ஓய்வில்தான் இருப்பாராம். ஷூட்டிங் எல்லாம் நவம்பரில் இருந்து தானாம்.

ஏமாந்த ரசிகப் பெருமக்கள்...

ஏமாந்த ரசிகப் பெருமக்கள்...

மீண்டும் உடனடியாக படங்களில் நடிக்கத் துவங்கி விடுவார் என்ற ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை தவிடு பொடியாக்கி இருக்கிறது இந்தச் செய்தி.

கேன்சர் புத்தகம்...

கேன்சர் புத்தகம்...

ஓய்வை உருப்படியாக செலவிட நினைத்த மனீஷா, கேன்சரை தான் எதிர்கொண்டு மீண்ட கதையை புத்தகமாக எழுத இருக்கிறாராம்.

நல்ல முயற்சி...

நல்ல முயற்சி...

கேன்சரால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு இந்த புத்தகம் நம்பிக்கையும், மன உறுதியையும் அளிப்பதாக இருக்கும் என உறுதி அளிக்கிறார் மனீஷா கொய்ராலா.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X