குட்டை டவுசரில் விதவிதமான போஸ்... இந்த நடிகை யாருனு தெரியுதா ?

சென்னை : ஒரே ஒரு பாட்டின் மூலம் ஒட்டுமொத்த ஹார்ட்டையும் அவுட்டாக்கிய சொப்பன சுந்தரி கவர்ச்சி தூக்கலாக இருக்கும் புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்துள்ளார்.

இந்த புகைப்படம் சோஷியல் மீடியாவில் வைரலாகி அவரது ரசிகர்களால் ட்டிராண்டிங்கில் உள்ளது.

அதிரிபுதிரி

அதிரிபுதிரி

பட வாய்ப்பு இல்லை என்றாலும் பரவாயில்லை சமூகவலைதளத்தில் ஆக்டிவாக இருந்தால் போதும், மக்கள் மனதில் இடம்பிடித்துவிடலாம் என நினைத்து, சினிமாவில் காணாமல் போன பல நடிகைகள் இணையத்தில் அதிரிபுதிரி செய்து வருகின்றனர்.

மனிஷா யாதவ்

மனிஷா யாதவ்

அந்த வகையில், இணையத்தை திணறடித்து வருகிறார் மனிஷா யாதவ். இவர் 2012ம் ஆண்டு இயக்குநர் பாலாஜி சக்திவேல் இயக்கிய வழக்கு எண் 18/9 படம் மூலம் கதாநாயகியாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். மாடல் அழகியான மனிஷா யாதவ், பெங்களூரை பூர்வீகமாக் கொண்டவர். இவர் நடித்த முதல் திரைப்படத்திலேயே ரசிகர்களின் கவனம் ஈர்த்தார்.

பல படங்களில்

பல படங்களில்

முதல் திரைப்படத்தின் வெற்றியையடுத்து சுசீந்திரன் இயக்கிய ஆதலால் காதல் செய்வீர் படம் மூலம் புகழ்பெற்றார். அதனைத் தொடர்ந்து ஜன்னல் ஓரம், பட்டையை கிளப்பணும் பாண்டியா, த்ரிஷா இல்லன்னா நயன்தாரா, ஒரு குப்பை கதை உள்ளிட்ட படங்களில் நடித்தார்.

சொப்பன சுந்தரி

சொப்பன சுந்தரி

இத்தனை படங்களில் நடித்திருந்தாலும், ஒரே பாடலில் தமிழகத்தை ஆட வைத்து பட்டி, தொட்டி எல்லாம் ஹிட்டடித்தார். வெங்கட் பிரபு இயக்கத்தில் சென்னை 28 படத்தின் இரண்டாம் பாகத்தில் மனிஷா யாதவ் ஆடிய சொப்பன சுந்தரி பாடல் செம்ம ஹிட்டானது.

காதலருடன் திருமணம்

காதலருடன் திருமணம்

ரசிகர்கள் செல்லமாக சொப்பன சுந்தரி என்று அழைக்கும் அளவுக்கு ஒரே பாடல் மூலம் தமிழ் ரசிகர்களை நெஞ்சத்தை கொள்ளையடித்த மனிஷா யாதவ் நீண்ட நாள் காதலரை திருமணம் செய்துக்கொண்டு நடிப்புக்கு முழுக்குப்போட்டு இருந்தார்.

Recommended Video

Smruthi Venkat Mookuthi Amman RJ Balaji தங்கச்சி | Filmibeat Tamil
விதவிதமான போஸ்

விதவிதமான போஸ்

சினிமாவில் நடிப்பதை நிறுத்திவிட்டாலும், சோசியல் மீடியாவில் ஆக்டிவாக வலம் வர ஆரம்பித்துள்ள மனிஷா யாதவ், குட்டி டவுசரில் விதவிதமாக போஸ் கொடுத்து ரசிகர்களை மெர்சலாக்கி உள்ள புகைப்படம் இணையத்தை தும்சம் செய்து வருகிறது. புகைப்படத்தைப்பார்த்து சொக்கிப்போன ரசிகர்கள் சொப்பன சுந்தரி நடிக்கவாமா என அன்பு வேண்டுகோள்விடுத்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X