»   »  மயக்க வரும் மணீஷா மதன் படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களை மயக்க வருகிறார் மாடல் அழகி மணீஷா.வாரத்திற்கு ஒரு படம் என்ற கணக்கில் ஜெட் வேகத்தில் கோலிவுட்காரர்களைக் குழப்பி வந்தவர் ஜெய் ஆகாஷ். தெலுங்குதிரையுலகில் கொஞ்ச காலம் குப்பை கொட்டி வந்த ஜெய் ஆகாஷ், அப்படியே தமிழுக்கும் தாவினார்.தெலுங்கில் நடித்தாலும் நான் பச்சைத் தமிழன்தான் என்று மார் தட்டி வந்த ஜெய் ஆகாஷ் அவர் நடிக்கும் படங்களுக்குமுக்கால்வாசி பைனான்ஸை அவரே பார்த்துக் கொண்டார். இதனால் ஏகப்பட்ட படங்களுடன் கோலிவுட்டைக் கலக்கி வந்தார்.அதே, குருதேவா, ராமகிருஷ்ணா என அவர் நடித்த படங்கள் வரிசையாக ரிலீஸ் ஆகின. அதே வேகத்தில் பெட்டிக்குள்ளும்போய் விட்டன. இருந்தாலும், இந்தப் படங்களை தெலுங்கில் டப் செய்து வெளியிட்டு போட்ட காசில் முக்கால்வாசி எடுத்துநஷ்டப்படாமல் பிழைத்து வருகிறார் ஆகாஷ்.படங்களில் நடிப்பதோடு, கூட நடிக்கும் ஹீரோயின்களையும் கவர்ந்து இழுத்து காதலித்தும் வந்தார். அவரது லேட்டஸ்ட்காதலியான பிரணதிக்கும், அவருக்கும் காதல் உச்சகட்டத்திற்குப் போய் இப்போது முடிந்தும் போய் விட்டதாம்.இடையில் கொஞ்ச காலம் காணாமல் போயிருந்த ஜெய் ஆகாஷ் இப்போது ஆகாஷ் என்று பெயரை சுருக்கிக் கொண்டு மீண்டும்களத்தில் குதித்துள்ளார். மதன் என்ற படத்தை தயாரித்து, இயக்கி, நடித்து தமிழ் ரசிகர்களைப் பயமுறுத்தப் போகிறார் ஆகாஷ். இந்தப் படத்தின் கதைரொம்பப் பழசு.அந்தக் காலத்தில் வெளியான சிகப்பு ரோஜாக்கள், லேட்டஸ்டாய் பரபரப்பை ஏற்படுத்திய மன்மதன் ஆகிய இரு படங்களின்(ரெண்டுமே ஒண்ணுதான்னு சொன்னால் சிம்பு கோச்சுக்குவார்) கதையையும் கலந்தடித்து மதன் படத்தின் கதையைஉருவாக்கியுள்ளார் ஆகாஷ்.பெண்களை பழிவாங்கும் நாயகனாக அதாவது மதனாக வருகிறார் மன்மனதான ஆகாஷ். இந்தப் படத்தில் அவருக்கு 3நாயகிகள். ஒருத்தர் சந்தோஷி, இன்னொருவர் மோகனா. 3வது நாயகியாக வருபவர் மணீஷா.ஆகாஷைப் பத்திப் பேச மேட்டர் பெரிசா இல்லை. எனவே ஹீரோயின்களை பத்தி மட்டும் இங்கே பேசுவோம் (அதானே!).மூன்று நாயகிகள் இருந்தாலும் மணீஷாதான் படத்தின் முழு பலமாம். அதவாது தூண். அந்த அளவுக்கு அம்மணி கிளாமரில்புகுந்து விளையாடி வருகிறாராம்.சென்னை லயோலா கல்லூரியிலிருந்து கோலிவுட்டுக்கு இறக்குமதியாகும் இன்னொரு நாயகி இந்த மணீஷா. இதேஏரியாவிலிருந்து கொஞ்ச காலத்திற்கு முன்பு இறக்குமதியானவர் அபர்ணா). மணீஷா மாடலிங் பார்ட்டியாம்.நீயெல்லாம் சினிமாவுக்குப் போனா ஜோதிகா, த்ரிஷா எல்லாம் அம்புட்டுதேன் என்று கூடப் படித்த தோழிகள் உசுப்பேத்தி விடசினிமாவுக்கு முயற்சித்துள்ளார். அவரது முயற்சியை மோப்பம் பிடித்து விட்ட ஆகாஷ், கூட்டி வந்து விட்டார் மதனின் 3நாயகிகளில் ஒருவராக. மணீஷா ரொம்ப அட்வான்ஸ் ரகம். தமிழ் சினிமாவில் காட்டும் கிளாமரெல்லாம் ரொம்ப சாதாரணமாம். இதெல்லாம் என்னங்ககிளாமர், கிழக்குக் கடற்கரை சாலைக்குப் போய் பாருங்க. அய்யோ, பின்னி எடுக்கிறாங்க, புள்ளைங்க என்றுபுளகாங்கிதப்படுகிறார்.தோடா, இப்படிப்பட்ட ஆளுங்கதான் கோலிவுட்டுக்கு ரொம்பத் தேவை என்று ரசிகர்கள் புல்லரிக்கப் போகிறார்கள் என்றோம்பதிலுக்கு.நிச்சயமா, இப்போதெல்லாம் நிஜத்தில் நடப்பதைத்தான் சினிமாவிலும் காட்டுகிறார்கள். அதில் மிகைப்படுத்துதல் என்பதெல்லாம்சுத்த ஹம்பக்.ஒரு காதலனும், காதலியும் தனிமையில் இருந்தால் என்னென்ன செய்வாங்க? சும்மாவா இருப்பாங்க!. அதை சினிமாவில்காட்டினால் மட்டும் தப்புங்கறாங்களே என்று அங்கலாய்க்கும் மணீஷா, மதனில் கிளாமரில் கலவரப்படுத்தி வருகிறாராம்.நான் ஓப்பன் டைப், எதையும் மறைத்துப் பேசத் தெரியாது. இதனால் என்ன மாதிரியான விமர்சனம் வரும் என்று யோசித்துப்பார்த்துப் பேச மாட்டேன். இங்க (அதாவது மனசுல) என்ன தோணுதோ அதை கொட்டி விடுவேன். அப்படித்தான் என்னுடன்இருப்பவர்களும் இருக்கணும்னு நினைப்பேன்.முதல் படத்திலேயே தனி நாயகி இல்லையே என்று நான் வருத்தப்படவில்லை. எனக்கு கதை பிடித்திருந்தது, என்னோட கேரக்டர்ரொம்பவே பிடிச்சிருந்தது. அதனால் சட்டென்று ஒத்துக் கொண்டேன் என்று மூச்சு விடாமல் பேசுகிறார் மணீஷா.இது மட்டும் மேட்டர் இல்லையாம், ஆகாஷ் தனிப்பட்ட முறையில் மணீஷாவுக்கு ரொம்ப பிரண்டாம் என்றும் சொல்கிறதுகோடம்பாக்ஸ்.மற்ற இரண்டு நாயகிகளில் சந்தோஷி ஏற்கனவே ஓரிரு படங்களில் தலை காட்டியவர், ஏகப்பட்ட டிவி சீரியல்களில் வேஷம்கட்டியவர். மோகனா தான் மணீஷா மாதிரி புதுமுகம். எனவே கூடுதல் கிளாமர் கியாரண்டி.வேறென்ன வேணும்னேன்!

மயக்க வரும் மணீஷா மதன் படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களை மயக்க வருகிறார் மாடல் அழகி மணீஷா.வாரத்திற்கு ஒரு படம் என்ற கணக்கில் ஜெட் வேகத்தில் கோலிவுட்காரர்களைக் குழப்பி வந்தவர் ஜெய் ஆகாஷ். தெலுங்குதிரையுலகில் கொஞ்ச காலம் குப்பை கொட்டி வந்த ஜெய் ஆகாஷ், அப்படியே தமிழுக்கும் தாவினார்.தெலுங்கில் நடித்தாலும் நான் பச்சைத் தமிழன்தான் என்று மார் தட்டி வந்த ஜெய் ஆகாஷ் அவர் நடிக்கும் படங்களுக்குமுக்கால்வாசி பைனான்ஸை அவரே பார்த்துக் கொண்டார். இதனால் ஏகப்பட்ட படங்களுடன் கோலிவுட்டைக் கலக்கி வந்தார்.அதே, குருதேவா, ராமகிருஷ்ணா என அவர் நடித்த படங்கள் வரிசையாக ரிலீஸ் ஆகின. அதே வேகத்தில் பெட்டிக்குள்ளும்போய் விட்டன. இருந்தாலும், இந்தப் படங்களை தெலுங்கில் டப் செய்து வெளியிட்டு போட்ட காசில் முக்கால்வாசி எடுத்துநஷ்டப்படாமல் பிழைத்து வருகிறார் ஆகாஷ்.படங்களில் நடிப்பதோடு, கூட நடிக்கும் ஹீரோயின்களையும் கவர்ந்து இழுத்து காதலித்தும் வந்தார். அவரது லேட்டஸ்ட்காதலியான பிரணதிக்கும், அவருக்கும் காதல் உச்சகட்டத்திற்குப் போய் இப்போது முடிந்தும் போய் விட்டதாம்.இடையில் கொஞ்ச காலம் காணாமல் போயிருந்த ஜெய் ஆகாஷ் இப்போது ஆகாஷ் என்று பெயரை சுருக்கிக் கொண்டு மீண்டும்களத்தில் குதித்துள்ளார். மதன் என்ற படத்தை தயாரித்து, இயக்கி, நடித்து தமிழ் ரசிகர்களைப் பயமுறுத்தப் போகிறார் ஆகாஷ். இந்தப் படத்தின் கதைரொம்பப் பழசு.அந்தக் காலத்தில் வெளியான சிகப்பு ரோஜாக்கள், லேட்டஸ்டாய் பரபரப்பை ஏற்படுத்திய மன்மதன் ஆகிய இரு படங்களின்(ரெண்டுமே ஒண்ணுதான்னு சொன்னால் சிம்பு கோச்சுக்குவார்) கதையையும் கலந்தடித்து மதன் படத்தின் கதையைஉருவாக்கியுள்ளார் ஆகாஷ்.பெண்களை பழிவாங்கும் நாயகனாக அதாவது மதனாக வருகிறார் மன்மனதான ஆகாஷ். இந்தப் படத்தில் அவருக்கு 3நாயகிகள். ஒருத்தர் சந்தோஷி, இன்னொருவர் மோகனா. 3வது நாயகியாக வருபவர் மணீஷா.ஆகாஷைப் பத்திப் பேச மேட்டர் பெரிசா இல்லை. எனவே ஹீரோயின்களை பத்தி மட்டும் இங்கே பேசுவோம் (அதானே!).மூன்று நாயகிகள் இருந்தாலும் மணீஷாதான் படத்தின் முழு பலமாம். அதவாது தூண். அந்த அளவுக்கு அம்மணி கிளாமரில்புகுந்து விளையாடி வருகிறாராம்.சென்னை லயோலா கல்லூரியிலிருந்து கோலிவுட்டுக்கு இறக்குமதியாகும் இன்னொரு நாயகி இந்த மணீஷா. இதேஏரியாவிலிருந்து கொஞ்ச காலத்திற்கு முன்பு இறக்குமதியானவர் அபர்ணா). மணீஷா மாடலிங் பார்ட்டியாம்.நீயெல்லாம் சினிமாவுக்குப் போனா ஜோதிகா, த்ரிஷா எல்லாம் அம்புட்டுதேன் என்று கூடப் படித்த தோழிகள் உசுப்பேத்தி விடசினிமாவுக்கு முயற்சித்துள்ளார். அவரது முயற்சியை மோப்பம் பிடித்து விட்ட ஆகாஷ், கூட்டி வந்து விட்டார் மதனின் 3நாயகிகளில் ஒருவராக. மணீஷா ரொம்ப அட்வான்ஸ் ரகம். தமிழ் சினிமாவில் காட்டும் கிளாமரெல்லாம் ரொம்ப சாதாரணமாம். இதெல்லாம் என்னங்ககிளாமர், கிழக்குக் கடற்கரை சாலைக்குப் போய் பாருங்க. அய்யோ, பின்னி எடுக்கிறாங்க, புள்ளைங்க என்றுபுளகாங்கிதப்படுகிறார்.தோடா, இப்படிப்பட்ட ஆளுங்கதான் கோலிவுட்டுக்கு ரொம்பத் தேவை என்று ரசிகர்கள் புல்லரிக்கப் போகிறார்கள் என்றோம்பதிலுக்கு.நிச்சயமா, இப்போதெல்லாம் நிஜத்தில் நடப்பதைத்தான் சினிமாவிலும் காட்டுகிறார்கள். அதில் மிகைப்படுத்துதல் என்பதெல்லாம்சுத்த ஹம்பக்.ஒரு காதலனும், காதலியும் தனிமையில் இருந்தால் என்னென்ன செய்வாங்க? சும்மாவா இருப்பாங்க!. அதை சினிமாவில்காட்டினால் மட்டும் தப்புங்கறாங்களே என்று அங்கலாய்க்கும் மணீஷா, மதனில் கிளாமரில் கலவரப்படுத்தி வருகிறாராம்.நான் ஓப்பன் டைப், எதையும் மறைத்துப் பேசத் தெரியாது. இதனால் என்ன மாதிரியான விமர்சனம் வரும் என்று யோசித்துப்பார்த்துப் பேச மாட்டேன். இங்க (அதாவது மனசுல) என்ன தோணுதோ அதை கொட்டி விடுவேன். அப்படித்தான் என்னுடன்இருப்பவர்களும் இருக்கணும்னு நினைப்பேன்.முதல் படத்திலேயே தனி நாயகி இல்லையே என்று நான் வருத்தப்படவில்லை. எனக்கு கதை பிடித்திருந்தது, என்னோட கேரக்டர்ரொம்பவே பிடிச்சிருந்தது. அதனால் சட்டென்று ஒத்துக் கொண்டேன் என்று மூச்சு விடாமல் பேசுகிறார் மணீஷா.இது மட்டும் மேட்டர் இல்லையாம், ஆகாஷ் தனிப்பட்ட முறையில் மணீஷாவுக்கு ரொம்ப பிரண்டாம் என்றும் சொல்கிறதுகோடம்பாக்ஸ்.மற்ற இரண்டு நாயகிகளில் சந்தோஷி ஏற்கனவே ஓரிரு படங்களில் தலை காட்டியவர், ஏகப்பட்ட டிவி சீரியல்களில் வேஷம்கட்டியவர். மோகனா தான் மணீஷா மாதிரி புதுமுகம். எனவே கூடுதல் கிளாமர் கியாரண்டி.வேறென்ன வேணும்னேன்!

Posted By:
Subscribe to Oneindia Tamil
மதன் படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களை மயக்க வருகிறார் மாடல் அழகி மணீஷா.

வாரத்திற்கு ஒரு படம் என்ற கணக்கில் ஜெட் வேகத்தில் கோலிவுட்காரர்களைக் குழப்பி வந்தவர் ஜெய் ஆகாஷ். தெலுங்குதிரையுலகில் கொஞ்ச காலம் குப்பை கொட்டி வந்த ஜெய் ஆகாஷ், அப்படியே தமிழுக்கும் தாவினார்.

தெலுங்கில் நடித்தாலும் நான் பச்சைத் தமிழன்தான் என்று மார் தட்டி வந்த ஜெய் ஆகாஷ் அவர் நடிக்கும் படங்களுக்குமுக்கால்வாசி பைனான்ஸை அவரே பார்த்துக் கொண்டார். இதனால் ஏகப்பட்ட படங்களுடன் கோலிவுட்டைக் கலக்கி வந்தார்.

அதே, குருதேவா, ராமகிருஷ்ணா என அவர் நடித்த படங்கள் வரிசையாக ரிலீஸ் ஆகின. அதே வேகத்தில் பெட்டிக்குள்ளும்போய் விட்டன. இருந்தாலும், இந்தப் படங்களை தெலுங்கில் டப் செய்து வெளியிட்டு போட்ட காசில் முக்கால்வாசி எடுத்துநஷ்டப்படாமல் பிழைத்து வருகிறார் ஆகாஷ்.

படங்களில் நடிப்பதோடு, கூட நடிக்கும் ஹீரோயின்களையும் கவர்ந்து இழுத்து காதலித்தும் வந்தார். அவரது லேட்டஸ்ட்காதலியான பிரணதிக்கும், அவருக்கும் காதல் உச்சகட்டத்திற்குப் போய் இப்போது முடிந்தும் போய் விட்டதாம்.

இடையில் கொஞ்ச காலம் காணாமல் போயிருந்த ஜெய் ஆகாஷ் இப்போது ஆகாஷ் என்று பெயரை சுருக்கிக் கொண்டு மீண்டும்களத்தில் குதித்துள்ளார்.

மதன் என்ற படத்தை தயாரித்து, இயக்கி, நடித்து தமிழ் ரசிகர்களைப் பயமுறுத்தப் போகிறார் ஆகாஷ். இந்தப் படத்தின் கதைரொம்பப் பழசு.

அந்தக் காலத்தில் வெளியான சிகப்பு ரோஜாக்கள், லேட்டஸ்டாய் பரபரப்பை ஏற்படுத்திய மன்மதன் ஆகிய இரு படங்களின்(ரெண்டுமே ஒண்ணுதான்னு சொன்னால் சிம்பு கோச்சுக்குவார்) கதையையும் கலந்தடித்து மதன் படத்தின் கதையைஉருவாக்கியுள்ளார் ஆகாஷ்.

பெண்களை பழிவாங்கும் நாயகனாக அதாவது மதனாக வருகிறார் மன்மனதான ஆகாஷ். இந்தப் படத்தில் அவருக்கு 3நாயகிகள். ஒருத்தர் சந்தோஷி, இன்னொருவர் மோகனா. 3வது நாயகியாக வருபவர் மணீஷா.

ஆகாஷைப் பத்திப் பேச மேட்டர் பெரிசா இல்லை. எனவே ஹீரோயின்களை பத்தி மட்டும் இங்கே பேசுவோம் (அதானே!).மூன்று நாயகிகள் இருந்தாலும் மணீஷாதான் படத்தின் முழு பலமாம். அதவாது தூண். அந்த அளவுக்கு அம்மணி கிளாமரில்புகுந்து விளையாடி வருகிறாராம்.

சென்னை லயோலா கல்லூரியிலிருந்து கோலிவுட்டுக்கு இறக்குமதியாகும் இன்னொரு நாயகி இந்த மணீஷா. இதேஏரியாவிலிருந்து கொஞ்ச காலத்திற்கு முன்பு இறக்குமதியானவர் அபர்ணா). மணீஷா மாடலிங் பார்ட்டியாம்.

நீயெல்லாம் சினிமாவுக்குப் போனா ஜோதிகா, த்ரிஷா எல்லாம் அம்புட்டுதேன் என்று கூடப் படித்த தோழிகள் உசுப்பேத்தி விடசினிமாவுக்கு முயற்சித்துள்ளார். அவரது முயற்சியை மோப்பம் பிடித்து விட்ட ஆகாஷ், கூட்டி வந்து விட்டார் மதனின் 3நாயகிகளில் ஒருவராக.

மணீஷா ரொம்ப அட்வான்ஸ் ரகம். தமிழ் சினிமாவில் காட்டும் கிளாமரெல்லாம் ரொம்ப சாதாரணமாம். இதெல்லாம் என்னங்ககிளாமர், கிழக்குக் கடற்கரை சாலைக்குப் போய் பாருங்க. அய்யோ, பின்னி எடுக்கிறாங்க, புள்ளைங்க என்றுபுளகாங்கிதப்படுகிறார்.

தோடா, இப்படிப்பட்ட ஆளுங்கதான் கோலிவுட்டுக்கு ரொம்பத் தேவை என்று ரசிகர்கள் புல்லரிக்கப் போகிறார்கள் என்றோம்பதிலுக்கு.

நிச்சயமா, இப்போதெல்லாம் நிஜத்தில் நடப்பதைத்தான் சினிமாவிலும் காட்டுகிறார்கள். அதில் மிகைப்படுத்துதல் என்பதெல்லாம்சுத்த ஹம்பக்.

ஒரு காதலனும், காதலியும் தனிமையில் இருந்தால் என்னென்ன செய்வாங்க? சும்மாவா இருப்பாங்க!. அதை சினிமாவில்காட்டினால் மட்டும் தப்புங்கறாங்களே என்று அங்கலாய்க்கும் மணீஷா, மதனில் கிளாமரில் கலவரப்படுத்தி வருகிறாராம்.

நான் ஓப்பன் டைப், எதையும் மறைத்துப் பேசத் தெரியாது. இதனால் என்ன மாதிரியான விமர்சனம் வரும் என்று யோசித்துப்பார்த்துப் பேச மாட்டேன். இங்க (அதாவது மனசுல) என்ன தோணுதோ அதை கொட்டி விடுவேன். அப்படித்தான் என்னுடன்இருப்பவர்களும் இருக்கணும்னு நினைப்பேன்.

முதல் படத்திலேயே தனி நாயகி இல்லையே என்று நான் வருத்தப்படவில்லை. எனக்கு கதை பிடித்திருந்தது, என்னோட கேரக்டர்ரொம்பவே பிடிச்சிருந்தது. அதனால் சட்டென்று ஒத்துக் கொண்டேன் என்று மூச்சு விடாமல் பேசுகிறார் மணீஷா.

இது மட்டும் மேட்டர் இல்லையாம், ஆகாஷ் தனிப்பட்ட முறையில் மணீஷாவுக்கு ரொம்ப பிரண்டாம் என்றும் சொல்கிறதுகோடம்பாக்ஸ்.

மற்ற இரண்டு நாயகிகளில் சந்தோஷி ஏற்கனவே ஓரிரு படங்களில் தலை காட்டியவர், ஏகப்பட்ட டிவி சீரியல்களில் வேஷம்கட்டியவர். மோகனா தான் மணீஷா மாதிரி புதுமுகம். எனவே கூடுதல் கிளாமர் கியாரண்டி.

வேறென்ன வேணும்னேன்!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil