ஹீரோயின்
வழக்கமாக சினிமாவில் சான்ஸ் எல்லாம் ஓய்ந்த பின் நம் நடிகைகள் அடுத்ததாகத் தேடி ஓடும் இடம் டிவி சீரியல்.
குஷ்பு, ஊர்வசி, விந்தியா என இந்த லிஸ்ட் மிக நீண்டது. அதே நேரத்தில் டிவியில் இருந்து சினிமாவில் காலடிஎடுத்து வைக்கும் ஆட்கள் மிகக் குறைவு. அப்படி வந்தவர் தான் ஆசை ஆசையாய் ஹீரோயின் ஷர்மிலி. இவர் டிவிநிகழ்ச்சிகளை தொகுத்து வழக்கி வந்தவர்.
ஆனால், டிவி தொடர்களில் நடித்தவர்களுக்கு சினிமாவில் ஹீரோயின் சான்ஸ் அடிப்பது ரொம்ப அபூர்வம். அந்தரேர் சான்ஸ் மஞ்சரிக்குக் கிடைத்துள்ளது.
டிவியில் பல்வேறு தொடர்களில் வில்லியாக நடித்துக் கொண்டிருக்கும் இவரது பூர்வீகம் மலேசியா.
இப்போது இவருக்கு பத்திக்கிச்சு என்ற படத்தில் ஹீரோயின் சான்ஸ் அடித்துள்ளது. படு கவர்ச்சியுடன் கூடியவேடமாம். படப்பிடிப்பு தீவிரமாக நடந்து வரும் நிலையில் அந்தப் படத்தின் இயக்குனருக்கும் மஞ்சரிக்கும்இடையில் கூட காதல் பத்திக்கிச்சு என்கிறார்கள்.


Click it and Unblock the Notifications











